Gold Price Today: தேசிய அளவில் இன்று தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இன்று 22 காரட் தங்கத்தின் 10 கிராம் விலை ரூ .43, 370 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ .44,370 ஆக உள்ளது. 22 காரட் 100 கிராம் தங்கத்தின் விலை 4,33,700 ரூபாயாகவும் 24 காரட் 100 கிராம் தங்கத்தின் விலை 4,43,700 ரூபாயாகவும் உள்ளது.
இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் தங்கத்தின் விலை அதிகரித்தது. எனினும், மார்ச் மாதத்தில் அதிக நாட்களில் தங்கத்தின் விலை கீழ் நோக்கியே சென்றது. இறுதியில், மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய நிதியாண்டின் முடிவில் நாட்டில் தங்கத்தின் விலை சீராகத் தொடங்கியது.
முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரத்தை இங்கே பார்க்கலாம்:
இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை (Gold Rate) வேறுபடுகிறது. வெவ்வேறு மாநில அரசுகள் தங்கத்திற்கு பலவித வரிகளை விதிக்கின்றன.
இன்று டெல்லியில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .43,800 ஆக உள்ளது. மும்பையில் 22 காரட் தங்கம் 43,370 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. கொல்கத்தாவில் 22 காரட் தங்கம் 44,290 ரூபாய்க்கும் சென்னையில் 22 காரட் தங்கம் 42,380 ரூபாய்க்கும், பெங்களூரில் 41,650 ரூபாய்க்கும் லக்னோவில் 43,800 ரூபாய்க்கும் தங்கம் இன்று விற்பனையாகிறது.
22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தின் (Gold) விலைகளில் மாற்றம் இருப்பது அனைவரும் அறிந்ததே. இன்று தில்லியில் 24 காரட் தங்கத்தின் விலை 43,800 ரூபாயாகவும், மும்பையில் 43,370 ரூபாயாகவும், சென்னையில் 42,380 ரூபாயாகவும் பெங்களூரில் 41,650 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 44,290 ரூபாயாகவும் லக்னோவில் 43,800 ரூபாயாகவும் உள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தங்க விலைகளில் சரக்கு மற்றும் சேவை வரி (GST), TCS மற்றும் பிற வரிகள் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால், இந்த தங்க விலைகளுக்கும் நகைக் கடைகளின் விலை பட்டியலுக்கும் சிறிய வேறுபாடுகள் இருக்கும்.
ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR