Low Cement Price: நீங்கள் சமீபத்தில் உங்கள் வீட்டைக் கட்ட திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆம், விரைவில் சிமென்ட் விலை 10 முதல் 12 ரூபாய் வரை குறையலாம் என கூறப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில், தேவை வலுவாக இருந்தாலும், போட்டி அதிகரித்துள்ளதால், சிமென்ட் நிறுவனங்கள் விலையை ஒன்று முதல் மூன்று சதவீதம் (ரூ.10 முதல் 12 வரை) குறைக்கலாம். வீடு கட்டுமானம் செய்வோருக்கு நம்பிக்கை அளிக்கும் இந்த செய்தி, அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிமென்ட் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை குறைவதால் சிமென்ட் விலை குறைய வாய்ப்புள்ளதாக கிரிசில் ரேட்டிங்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் சிமென்ட் ஒரு மூட்டை ரூ.391 என்ற உச்சபட்ச அளவை எட்டியது. அறிக்கையின்படி, தொற்றுநோயால் ஏற்பட்ட முட்டுக்கட்டை தவிர, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் எழுந்த சூழ்நிலை ஆகியவை இந்த விலை உயர்வில் முக்கிய பங்கு வகித்தன. இருப்பினும், நடப்பு நிதியாண்டில் சிமென்ட் துறையில் போட்டி தீவிரமடைந்துள்ளதாலும், இடுபொருள் செலவுகள் தணிந்ததாலும், கட்டண உயர்வு நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
மேலும் படிக்க | Hurun India 500: பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ்! பின்னுக்கு தள்ளப்பட்ட அதானி
இந்த ஆண்டு சிமெண்டின் சில்லறை விலைகள் 1 முதல் 3 சதவீதம் வரை குறையக்கூடும் என்றும் அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில், சிமென்ட் விலை சுமார் ஒரு சதவீதம் குறைந்து ஒரு மூடைக்கு சராசரியாக ரூ.388 ஆக இருந்தது. சிமென்ட் விலை 3 சதவீதம் குறைந்தால், 10 முதல் 12 ரூபாய். அதன்படி வீடு கட்டுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CRISIL MI&A ரிசர்ச், இந்த நிதியாண்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆண்டுக்கு ஆண்டு சிமென்ட் தேவை 8-10% அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது. ஆனால், இதனால் விலை உயராது. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சிமென்ட் விலையில் மென்மையாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இருப்பினும், கடந்த ஆண்டை விட விலை அதிகமாகவே உள்ளது.
சொந்த வீடு வேண்டும் என்பது பலரின் கனவு மற்றும் அவர்களின் வாழ்நாள் லட்சியம். இருப்பினும், உங்கள் சொந்த கனவு வீட்டைக் கட்டுவது மிகவும் விலை உயர்ந்த விஷயமாக உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற பல வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. உங்கள் சொந்த வீட்டை வாங்குவதற்கு 8.5 சதவீத வட்டி விகிதத்தில் மலிவான வீட்டுக் கடனைப் பெறலாம்.
மேலும் படிக்க | புகழின் உச்சத்திற்கு செல்லும் முகேஷ் அம்பானி! புதிய வரலாற்றை உருவாக்கிய ரிலையன்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ