ஜூன் 4 முதல் Google Pay சேவை நிறுத்தம்: ஷாக்கில் ஜிபே பயனர்கள்

Google Pay Latest News: கூகுள் நிறுவனத்தில் கூகுள் பே சேவையை இந்தியா உட்பட பல நாடுகளில் மக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த பயன்படுத்தி வருகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 21, 2024, 01:02 PM IST
  • Google Pay சேவை நிறுத்தம்.
  • இந்தியாவிலும் கூகுள் பே இனி இருக்காதா?
  • இந்த முடிவு எதற்காக எடுக்கப்பட்டது?
ஜூன் 4 முதல் Google Pay சேவை நிறுத்தம்: ஷாக்கில் ஜிபே பயனர்கள்

Google Pay Latest News: பண பரிவர்த்தனைகளை செய்ய யுபிஐ செயலியான கூகுள் பே பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி முதல் உலகின் சில நாடுகளில் கூகுள் பே செயலியை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம். 

Add Zee News as a Preferred Source

ஆன்லைன் கட்டண செயலியான Google Pay -ஐ உலகம் முழுவதும் உள்ள பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஜூன் 4 முதல், உலகின் சில நாடுகளில் கூகுள் பே சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்தப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த தேதிக்கு பிறகு குறிப்பிட்ட நாட்டில் உள்ள மக்கள் இந்த செயலி மூலம் பணம் செலுத்த முடியாது. 
 
கூகுள் நிறுவனத்தில் கூகுள் பே சேவையை இந்தியா உட்பட பல நாடுகளில் மக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த பயன்படுத்தி வருகிறார்கள். 2022 ஆம் ஆண்டில் கூகுள் வாலட் (Google Wallet) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஜிபே (Gpay) பயனர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனைகளை செய்யும் பயனர்களுக்கு இந்த செயலி முதல் விருப்பமாக மாறியுள்ளது. இது பண பரிமாற்றங்களுக்கு யுபிஐ (UPI) முறையை பயன்படுத்தும் மக்களுக்கு இடையில் மிக பிரபலமாகி வருகிறது. 

இந்தியாவிலும் கூகுள் பே இனி இருக்காதா? (Google Pay in India)

கூகுள் பே செயலியின் பயன்பாட்டை சில நாடுகளில் மூடுவதற்கான கூகுள் நிறுவனத்தின் இந்த முடிவால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் ஜூன் 4, 2024 முதல் அமெரிக்காவில் மட்டும்தான் Google Pay நிறுத்தப்படவுள்ளது. அதாவது, Google Pay இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. அமெரிக்காவில் மட்டுமே தடை செய்யப்படவுள்ளது. ஜூன் 4க்குப் பிறகு, Google Pay செயலி இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டும் வேலை செய்யும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியது! EPFO சொல்லும் Payroll தரவுகள்!

இந்த முடிவு எதற்காக எடுக்கப்பட்டது?

கூகுள் வாலட் மூலம் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, இதுவரை 180 நாடுகளை சேர்ந்த பயனர்கள் கூகுள் பே -க்கு பதிலாக கூகுள் வாலட்டை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது அமெரிக்காவிலும் கூகுள் பே செயலி தடை செய்யப்படவுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ளவர்களால் கூகுள் பே மூலம் பணம் அனுப்பவோ, பணம் பெறவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் எடுத்துள்ள இந்த முயற்சி அனைத்து பயனர்களையும் கூகுள் வாலட்டுக்கு மாற்றுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றது. 

கூகுள் வாலட்டுக்கு மாற்றம்

அனைத்து பயனர்களும் கட்டம் கட்டமாக Google Wallet க்கு மாற்றப்படுவார்கள் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. ஜூன் 4 -க்கு பிறகு அமெரிக்காவில் Google Pay வேலை செய்யாது. Google Pay சேவை நிறுத்தப்பட்ட பிறகு, அமெரிக்கப் பயனர்களால் பணம் செலுத்தவோ பெறவோ முடியாது. கூகுள் ஏற்கனவே அனைத்து அமெரிக்க பயனர்களையும் கூகுள் வாலட்டுக்கு மாறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கூகுள் வாலட்டை விளம்பரப்படுத்தவே கூகுள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. கூகுள் வாலட் கிட்டத்தட்ட 180 நாடுகளில் Gpay -க்கு பதிலாக பயன்பாட்டில்  உள்ளதாக நிறுவனம் ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | என்ன இப்படி செஞ்சுட்டாங்களே? மத்திய அரசு ஊழியர்களின் கிராஜுவிட்டி உயர்வு நிறுத்திவைப்பு ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News