யாருக்குதான் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்காது? இந்த ஆசை பலருக்கு இருந்தாலும் இதற்காக எப்படி ப்ளான் போடுவது என்பதும், சரியாக எப்படி செயல்படுத்துவது என்பதும் பலருக்கும் தெரியாமல் இருக்கும். நாம் படங்களில் பார்ப்பது போல யாராலும் ஓவர்-நைட்டில் எல்லாம் பணக்காரர் ஆகிவிட முடியாது. அதற்கு நிறைய விடாமுயற்சியும், நிலையான எண்ணங்களும் இருக்க வேண்டும். பலருக்கு நிதி நிலைமையை உயர்த்தி விடும் ஏணியாக இருக்கின்றன, சில மியூஸுவல் ஃபண்ட்ஸ் திட்டங்கள். ஒருவர் கோடீஸ்வரராக மாறுவதற்கும் இந்த திட்டங்கள்தான் உதவுகின்றன.
எஸ்.ஐ.பி (SIP) என்றால் என்ன?
Systematic Investment Plan (SIP) திட்டத்தை மியூஷுவல் ஃபண்ட்ஸ் வழங்குகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சீரான இடைவெளியில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில், மாதம் ஒருமுறை அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என்று மொத்தமாக முதலீடு செய்வதற்குப் பதிலாக. தவணைத் தொகையாக ஒரு மாதத்திற்கு ரூ.500 ஆக இருக்கலாம். இதில், தொடர் வைப்புத்தொகையையும் வைத்துக்கொள்ளலாம்.
தற்போது இந்திய மியூஷ்வல் ஃபண்ட்ஸ் முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது இந்த எஸ்.ஐ.பி திட்டங்கள் பிரபலம் அடைந்து வருகின்றன. இதன் மூலம் உங்கள் முதலீட்டினை நீண்ட காலத்திற்கு வைத்துக்கொள்ளலாம்.
எஸ்.ஐ.பில், முன்கூட்டியே கணக்கு தொடங்க, சில தனிப்பட்ட வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், காலங்கள் செல்ல செல்ல இந்த பங்களிப்பினை அதிகரிகக்வும் பின்னர் எஸ்.ஐ.பி படிநிலைகளை அதிகரிகவும் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எஸ்.ஐ.பி முதலீடு:
எஸ்.ஐ.பிக்களில் ஒழுக்கமாக முதலீடு செய்வதன் மூலமாக, மியூஷுவல் ஃபண்ட்ஸ்களில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தில் இருந்து கர்பஸ் எனப்படும் மொத்த தொகையை பெற முடியும். உதாரணத்திற்கு, ஒரு பங்கீட்டாளர், அவரது ஓய்வு காலத்தில் 1 கோடி வரை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | EPFO Update: ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளை கணக்கிடுவது எப்படி? முழு விவரம் இதோ
நீண்ட கால எஸ்.ஐ.பிக்கள் மூலம், பெறும் தொகையும் அதிகம் என்பதை மியூஷுவல் ஃபண்ட்ஸ் நிபுணர்கள் அடிக்கோடிட்டு காட்டுகின்றனர். இதன் மூலம், முதலீட்டாளர்கள் தங்களின் வட்டிக்கே வட்டியை பெறுகின்றனராம்.
15 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலங்களுக்கு மேல் முதலீடு செய்பவர்கள், தாங்கள் செய்த முதலீட்டில் இருந்து அதைவிட 15 சதவிகிதமோ அல்லது அதை விட அதிகமாகவோ வருமானத்தை ஈட்டலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதில் முதலீடு செய்பவர்கள் தங்களது மாதாந்திர ஸ்டெப்-அப் திட்டத்தின் படி தங்களின் மியூசுவல் ஃபண்ட்களை தங்களது வருடாந்திர சம்பள உயர்வை பொருத்து பங்களிப்பை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மாதம், 5000 ரூபாய் எஸ்ஐபி தொடங்கினால், அதில் 15 சதவிகிதம் வருடாந்திர ஸ்டெப்-அப் மற்றும் 15 சதவிகிதம் வருடாந்திர மியூஷுவல் ஃபண்ட்ச் வருவாயை பராமரிக்கலாம். இதன் மூலம், இதில் பணத்தை செலுத்திய முதலீட்டாளர்கள், சுமார் 25 ஆண்டுகளில் 5.22 கோடி ரூபாய் வரை சேர்க்க முடியும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
(இந்த செய்தி, இணையத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகவும். மியூஷுவல் ஃபண்ட் மற்றும் எஸ்.ஐ.பிக்களில் முதலீடு செய்வதற்கு முன்னர் திட்டம் சார்ந்து ஆராய்ந்து, வல்லுநர்களுடன் அறிவுரை பெற்ற பின்னர் முதலீடு செய்யவும். இதற்கு, ZEE MEDIA எந்த வகையிலும் பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | பணத்தை பன்மடங்காக்கும் FD... இரு மடங்காக பெருகியுள்ள மூத்த குடிமக்கள் முதலீடுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ