ஆன்லைன் மூலம் வங்கி கணக்கை மற்றொரு கிளைக்கு மாற்றுவது எப்படி?

எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றிக்கொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : Nov 26, 2022, 07:37 AM IST
  • எஸ்பிஐ மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
  • ஆன்லைன் மூலம் வங்கி கணக்கை மாற்றி கொள்ளலாம்.
  • இதற்காக நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
ஆன்லைன் மூலம் வங்கி கணக்கை மற்றொரு கிளைக்கு மாற்றுவது எப்படி? title=

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.  தனது வாடிக்கையாளர்கள் சிரமமின்றி எளிதாக டிரான்ஸாக்ஷன் செய்துகொள்ள ஆன்லைன் வசதிகளை வங்கி வழங்கியுள்ளது.  இப்போது ஒரு வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் வங்கி கிளையை மாற்ற நீங்கள் வங்கிகளுக்கு அலைந்து திரிந்து மாற்றவேண்டும்.  ஆனால் உங்களது வீண் அலைச்சலை குறைக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி ஒரு சேவையை வழங்கியுள்ளது, அதாவது எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக் கிளையை மாற்ற விரும்பினால் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக எஸ்பிஐயின் ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே வங்கி கிளையை மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு புத்தாண்டில் எக்கச்சக்க பரிசுகள் 

இன்டர்நெட் பேங்கிங் மூலம் உங்கள் எஸ்பிஐ கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.  எஸ்பிஐ வங்கியின் ஆன்லைன் சேவையை பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றுவதற்கான கோரிக்கையை உள்ளிட, நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் வங்கியின் கிளைக் குறியீடு உங்களுக்குத் தேவைப்படும்.  மேலும், உங்கள் மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்து அதன் பின்னர் வங்கியின் இணைய சேவையை நீங்கள் தொடங்க வேண்டும்.  ஆன்லைன் செயல்முறையைத் தவிர, யோனோ ஆப் அல்லது யோனோ லைட் மூலம் உங்கள் வங்கி கிளையை மாற்றிக்கொள்ளலாம், இதற்கு முக்கியம் உங்கள் மொபைல் எண் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும், அவ்வாறு இணைக்காவிட்டால் உங்களுக்கு ஓடிபி கிடைக்காது, ஓடிபி வந்தால் மட்டுமே உங்களால் கணக்கை மாற்ற முடியும்.  

வங்கி கிளையை ஆன்லைனில் மாற்றுவதற்கான செயல்முறை:

1) முதலில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான onlinesbi.com இல் உள்நுழையவும்.

2) அதில் 'பெர்சனல் பேங்கிங்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

3) பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை கிளிக் செய்யவும்.

4) பிறகு இ-சேவை என்ற டேப் இருக்கும், அதைக் கிளிக் செய்யவும்.

5) டிரான்ஸ்பர் சேவிங்ஸ் அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்யவும்.

6) இப்போது மாற்றப்பட வேண்டிய உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

7) நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் கிளையின் ஐஎஃப்எஸ்சி குறியீட்டை உள்ளிடவும்.

8) உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் ஒருமுறை சரிபார்த்து, உறுதி செய்வதற்கான பட்டனை க்ளிக் செய்யவேண்டும்.

9) இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை நிரப்பி, பின்னர் உறுதிப்படுத்தவும்.

10) இதனை செய்த சில நாட்களுக்குப் பிறகு உங்கள் கணக்கு நீங்கள் விருப்பப்பட்ட கிளைக்கு மாற்றப்படும்.

மேலும் படிக்க | 7th pay commission: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய முக்கிய அப்டேட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News