வரி செலுத்துவோரின் வசதிக்காக வருமான வரித் துறை, திங்கள்கிழமை (ஜூலை 20, 2020) முதல், தானாக முன்வந்து வருமான வரி விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த மின் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடையும் 11 நாட்களுக்கான இந்தப் பிரச்சாரம் 2018-19 நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் அல்லது வருமானத்தில் முரண்பாடுகள் / குறைபாடுகள் உள்ள மதிப்பீட்டாளர்கள் / வரி செலுத்துவோர் மீது கவனம் செலுத்துகிறது.
இ-பிரச்சாரத்தின் நோக்கம், வரி செலுத்துவோர் (Tax Payers) தங்கள் வரி / நிதி பரிவர்த்தனை தகவல்களை ஆன்லைனில் IT துறையிடம் சரிபார்க்க உதவுவதாகும். குறிப்பாக இது 2018-19 நிதியாண்டிற்கான மதிப்பீட்டாளர்களுக்கானது. தன்னார்வ இணக்கத்தை ஊக்குவித்து, அவர்களை நோடீஸ் மற்றும் தேவையற்ற செயல்முறைகளிலிருந்து விலக்கும்.
இந்த மின்-பிரச்சாரம் வரி செலுத்துவோரின் நலனுக்காக நடத்தப்படுகின்றது. இந்த மின்-பிரச்சாரத்தின் கீழ், IT துறையால் அடையாளம் காணப்பட்ட வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை (Income Tax Department) மின் அஞ்சல் / SMS -ஐ அனுப்பும். நிதி பரிவர்த்தனைகளின் அறிக்கை (SFT), மூலத் தொகையில் வரி விலக்கு (TDS), மூல தொகையில் வரி சேகரிப்பு (TCS), வெளிநாட்டு பணம் அனுப்புதல் (படிவம் 15 CC) போன்றவற்றின் மூலம் வருமானத் துறைக்கு கிடைத்த பணப் பரிமாற்றம் தொடர்பான தகவல்களை சரிபார்க்க இவை அனுப்பப்படும். ஜி.எஸ்.டி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பத்திரங்கள், வழித்தோன்றல்கள், பொருட்கள், பரஸ்பர நிதிகள் போன்றவற்றில் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களையும் வருமான வரித் துறை சேகரித்துள்ளது.
ALSO READ: e-PAN வசதியை பயன்படுத்துவதற்கு முன் இந்த விதிமுறைகளை படியுங்கள்...
ஈ- பிரச்சாரத்தின் கீழ், வரி செலுத்துவோர் நியமிக்கப்பட்ட போர்ட்டலில் தங்கள் உயர் மதிப்பு பரிவர்த்தனை தொடர்பான தகவல்களின் விவரங்களை பெற முடியும். இந்த விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்கள் ஆன்லைன் பதிலைச் சமர்ப்பிக்க முடியும்: (i) தகவல் சரியானது, (ii) தகவல் முழுமையாக சரியாக இல்லை, (iii) பிற நபர் / ஆண்டு தொடர்பான தகவல்கள், (iv) தகவல் நகல் / காட்டப்படும் பிற தகவல்களில் சேர்க்கப்பட்டுள்ளது, மற்றும் (v) தகவல் மறுக்கப்படுகிறது. எந்தவொரு IT அலுவலகத்திற்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் பதிலை ஆன்லைனிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.
மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி வருமானத்தை 2019-20 (2018-19 நிதியாண்டுக்கு பொருத்தமானது) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2020 ஜூலை 31 என்பதை கவனத்தில் கொள்க.