ஆமை வேகத்தில் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 0.2% அதிகரிப்பு

பொருளாதாரம் உயர்கிறது. மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.7% ஆக உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 28, 2020, 06:37 PM IST
ஆமை வேகத்தில் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 0.2% அதிகரிப்பு title=

புது டெல்லி: பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்க கடந்த சில மாதங்களாக நிதி அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகளின் பலன் வெளிச்சத்துக்கு வருகின்றன. நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஓரளவுக்கு, அதாவது 4.7% ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வெறும் 4.5% ஆக இருந்தது. இது கடந்த ஆறரை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு குறைந்தது. 

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2018-19 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 5.6% ஆக இருந்தது. பல நிதி நிறுவனங்கள் மூன்றாம் காலாண்டில் 4% வளர்ச்சி விகிதம் இருக்கம் எனக் கணித்திருந்தார்கள்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் இந்திய பொருளாதாரம் 5.1% என வேகமாக வளர்ந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 6.3 சதவீதமாக இருந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி விகிதத்தின் அதிகரிப்பு நாட்டின் மந்தநிலை முடிந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பல நாடுகளில் வைரஸ் பரவி வருவதால், பங்குச் சந்தை இன்று (வெள்ளிக்கிழமை) பெரும் வீழ்ச்சியுடன் மூடப்பட்டது. இதுவரை இல்லாத ஆளவுக்கு சென்செக்ஸ் இரண்டாவது முறையாக கடும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இரண்டாவது காலாண்டு வளர்ச்சி விகிதம் 4.5%:
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், அதாவது ஜூலை-செப்டம்பர் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதமாகக் குறைந்தது. இது கடந்த 26 காலாண்டுகளில், அதாவது அரை ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் மிக மெதுவான வளர்ச்சி விகிதமாகும். இது ஒரு வருடத்திற்கு முன்பு 7 சதவீதமாக இருந்தது. முந்தைய காலாண்டில் 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருமானம்:
2018-19 நிதியாண்டில் அரசின் வருமானம்: ரூ .3.17 லட்சம் கோடி
2019-20 நிதியாண்டில் அரசாங்கத்தின் மதிப்பிடப்பட்ட வருமானம்: ரூ .3.39 லட்சம் கோடி
2019-20 நிதியாண்டில் நவம்பர் வரை மொத்த வருவாய் வசூல்: ரூ .2.14 லட்சம் கோடி

Trending News