"பெரும் சாதனை": இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி..!!!

பாதுகாப்பு துறையில் இது ஒரு முக்கிய மைல் கல் என HSTDV வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங் வாழ்த்தினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2020, 05:45 PM IST
  • பாதுகாப்பு துறையில் இது ஒரு முக்கிய மைல் கல் என HSTDV வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்தினார்.
  • ஆயுத உற்பத்தியில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள இந்தியா, உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட ஹைபர் சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
"பெரும் சாதனை": இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி..!!! title=

புதுடெல்லி: ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக பயணிக்கும், அதி வேகத்தில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் பெற்ற ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப ஏவுகணையை (HSTDV) இந்தியா திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை அமைப்பை வேறு எந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகளாலும் கண்டறியவோ ட்ராக் செய்யவோ இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.

பாதுகாப்பு துறையில் இது ஒரு முக்கிய மைல் கல் என, HSTDV வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங் வாழ்த்தினார்.

" தற்சார்பு இந்தியா என்னும் பிரதமரின் குறிக்கோளை நிறைவேற்றுவதில் இது முக்கிய மைல்கல். இந்த சாதனைக்காக நான் DRDO-விற்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகளுடன் பேசினேன், இந்த மாபெரும் சாதனைக்கு அவர்களை வாழ்த்தினேன். இந்தியா அவர்களை நினைத்து பெருமை கொள்கிறது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ஆயுத உற்பத்தியில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள இந்தியா, உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட ஹைபர் சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

மேலும் படிக்க | NEP 2020 என்பது தேசத்தின் கல்வி கொள்கை, அரசின் கல்விக் கொள்கை அல்ல: பிரதமர் மோடி
https://zeenews.india.com/tamil/education/pm-narendra-modi-and-president...

Trending News