Credit Card-களில் வட்டி இல்லா கடன் வசதியை அறிமுகப்படுத்துகிறது IDFC First Bank

கிரெடிட் கார்டுகளில் முன்தொகைக்கு இருக்கும் வட்டி விகிதங்கள் மிக அதிகம். எனவே, முன்தொகைகளின் பங்கு ஒட்டுமொத்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் மிகவும் குறைவாகவே உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2021, 01:49 PM IST
  • கிரெடிட் கார்டுகளில் ஒரு புதிய முன்முயற்சியை கொண்டு வருகிறது IDFC First வங்கி.
  • துவக்க நிலையில், இது வங்கியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைக்கும்.
  • மார்ச் மாதத்திற்குப் பிறகு இந்த வசதி மற்ற வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்
Credit Card-களில் வட்டி இல்லா கடன் வசதியை அறிமுகப்படுத்துகிறது IDFC First Bank title=

மும்பை: IDFC First Bank Ltd தனது கிரெடிட் கார்டு வணிகத்தை இரண்டு தனித்துவமான சலுகைகள் மூலம் விரிவாக்க முயல்கிறது. இதில் 48 நாட்களுக்கு வட்டி இல்லாத முன்தொகை மற்றும் கடன் தொகைகளுக்கு விரிவான வட்டி விகிதங்கள் ஆகியவை அடங்கும். இந்த சேவைகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

வட்டி இல்லாத கடன் தொகைத் திட்டம் வங்கி தொழில்துறையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப் படுகிறது. இந்த அம்சத்தை வங்கி சோதித்து வருகிறது என்று IDFC First வங்கியின் தலைமை இயக்க அதிகாரி பி. மதிவாணன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

கிரெடிட் கார்டுகளில் முன்தொகைக்கு இருக்கும் வட்டி விகிதங்கள் மிக அதிகம். எனவே, முன்தொகைகளின் பங்கு ஒட்டுமொத்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் மிகவும் குறைவாகவே உள்ளது. உதாரணமாக, கடந்த நவம்பரில், வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து வெறும் 231.3 கோடி ரூபாயையே எடுத்தனர். ஆனால், பாயிண்ட் ஆஃப் சேல், அதாவது அவர்கள் பொருட்களை வாங்கிய இடங்களில் வாடிக்கையாளர்கள் ஸ்வைப் செய்த தொகையின் அளவு 62,349.7 கோடி ரூபாயாகும்.

கிரெடிட் கார்டுகளில் (Credit Card) ஒவ்வொரு முறை பண பரிவர்த்தனை செய்யப்படும் போதும் வங்கிகள் பொதுவாக 250-450 ரூபாய் வசூலிக்கின்றன. மாதத்திற்கு 2.5-3.5% வட்டியும் வசூலிக்கப்படுகின்றது. பணம் பெறப்பட்ட நாள் முதல் முழுத் தொகையும் திருப்பிச் செலுத்தப்படும் நாள் வரை இது பொருந்தும். பணமில்லாத செலவினங்களுக்கும் வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால் பண பரிவர்த்தனை போலல்லாமல், இதில் வாடிக்கையாளர்களுக்கு வட்டி இல்லாத சலுகைக்காலம் கிடைக்கும்.

ALSO READ: Bank Alert: பிப்ரவரி 1 முதல் Non-EMV ATM-களில் இருந்து பணம் எடுக்க முடியாது..!

IDFC First வங்கி தனது தற்போதைய வாடிக்கையாளர்களுடன் கிரெடிட் கார்டு தளத்தில் நுழைகிறது. துவக்க நிலையில், இது வங்கியால் (Banks) தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைக்கும். எனினும், மார்ச் மாதத்திற்குப் பிறகு இந்த வசதி மற்ற வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று மதிவாணன் கூறினார்.

IDFC First வங்கி, ஒரு வாடிக்கையாளர் எடுக்கும் தொகையின் அளவு எத்தனை இருந்தாலும், ஒரு பரிவர்த்தனைக்கு சுமார் ₹ 250 என்ற ஒரே தொகையை நிர்ணயிக்க விரும்புகிறது என்று மதிவாணன் கூறினார். "இது ஒரு சோதனையாகும். இது எங்கள் முதன்மை அம்சத்தைப் போல இல்லை. அது எவ்வாறு இயங்குகிறது என்பதை நாங்கள் பார்த்து அதன் படி முடிவெடுப்போம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய மற்றொரு முக்கிய அம்சம், வங்கியின் துடிப்புமிக்க விரிந்த வட்டி விகிதங்களாகும் (Interest Rates). ஆண்டிற்கு 9% முதல் 36% வரை இதன் வரம்பு உள்ளது.

கார்டுகளை வழங்கும் மற்ற வங்கிகளின் 36-40% என்ற வட்டி விகிதங்களை விட இது மிகவும் நேர்த்தியானது. வாடிக்கையாளரின் கடன் ரெகார்டுகள் அதாவது கிரெடிட் பிஹேவியரை சார்ந்து வருடாந்திர விகிதம் மாறுபடும் என IDFC First வங்கி கூறியுள்ளது.

ALSO READ: Widow Pension Scheme: அரசின் இந்த திட்டத்தின் நன்மைகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News