மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்... இந்த FD திட்டத்தில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்!

HDFC Senior Citizen Special FD: மூத்த குடிமக்களுக்கு அதிக பலன் அளிக்கும் சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தில் (Special FD) முதலீடு செய்வதற்கான கடைசி தேதியை ஹெச்டிஎப்சி வங்கி நீட்டித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 14, 2023, 06:12 AM IST
  • ஜூலை 7ஆம் தேதி வரை முதலீடு செய்ய கால நிர்ணயம் செய்யப்பட்டது.
  • தற்போது இது வரும் நவம்பர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
  • ஹெச்டிஎப்சி இதில் 0.25% கூடுதல் வட்டி அளிக்கிறது.
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்... இந்த FD திட்டத்தில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்! title=

HDFC Senior Citizen Special FD: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை (Special FD) மீண்டும் நீட்டித்துள்ளது. அதாவது, மூத்த குடிமக்கள் இன்னும் சிறப்பு நிலையான வைப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம். கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் சீனியர் சிட்டிசன் கேர் FD திட்டத்தை ஹெச்டிஎப்சி வங்கி கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தியது.

வங்கியின் இணையதளத்தின்படி, சீனியர் சிட்டிசன் கேர்  FD (Senior Citizen Care FD) திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி வரும் நவம்பர் 7 என அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் பிரிவில் வரும் வாடிக்கையாளர்களுக்கு ஹெச்டிஎப்சி வங்கி கூடுதல் வட்டி அளிக்கிறது. அதே நேரத்தில், இந்த திட்டத்தில் முதலீடு செய்ய கடைசி தேதி ஜூலை 7 ஆக முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கூடுதல் வட்டி கிடைக்கும்

ஹெச்டிஎப்சி வங்கியின் சீனியர் சிட்டிசன் கேர் FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 0.25% கூடுதல் வட்டி அளிக்கிறது. அதே நேரத்தில், இதில் பிரீமியம் 0.50 சதவீதம், இது ஐந்து வருடங்கள் ஒரு நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களில் கிடைக்கும். ஐந்து கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீடுகளுக்கு இந்த வட்டி விகிதம் கிடைக்கும். மூத்த குடிமக்கள் பராமரிப்பு FD வைத்திருப்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை 7.75 சதவீத வட்டி கிடைக்கும். அதே நேரத்தில், ஏழு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 3.35 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை இருக்கும். 

மேலும் படிக்க | Dying in harness: ஊழியர்களின் சம்பளத்தில் 25% கட்! பணியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு

கவர்ச்சிக்கரமாக மாறும் FD திட்டங்கள்

இது தவிர, ஹெச்டிஎப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கான முதலீட்டிற்கான சிறப்பு நிலையான வைப்புத்தொகையை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த நிதியாண்டில், ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ விகிதத்தை அதிகரித்தது. இதற்குப் பிறகு, வங்கிகளும் தங்கள் FD திட்டங்களை கவர்ச்சிகரமானதாக மாற்ற வட்டி விகிதங்களை அதிகரித்தன. இதனுடன், பல புதிய FD திட்டங்களும் தொடங்கப்பட்டன. நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கி இதுவரை எந்த வகையிலும் ரெப்போ விகிதத்தை உயர்த்தவில்லை. ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் கடன் விகிதமாகும்.

FD திட்டம் தொடங்கப்பட்டது

ஹெச்டிஎப்சி வங்கி ஒரு வருடத்தின் மொத்த நாட்களின் அடிப்படையில் வட்டியைக் கணக்கிடுகிறது. டெபாசிட் ஒரு லீப் மற்றும் லீப் அல்லாத ஆண்டில் இருந்தால், வட்டி நாட்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படும். அதாவது, லீப் ஆண்டில் 366 நாட்களும், லீப் அல்லாத ஆண்டில் 365 நாட்களும் உள்ளன. ஹெச்டிஎப்சி வங்கி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மே மாதத்தில் இரண்டு சிறப்பு நிலையான வைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. வங்கி 35 மாதங்கள் மற்றும் 55 மாதங்களுக்கு இரண்டு FD திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

மேலும் படிக்க | அரசு எடுத்த முக்கிய முடிவு, ஓய்வு பெறும் வயதில் பெரிய மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News