தினம் ₹95 சேமித்தால் போதும்; விரைவில் லட்சாதிபதியாகலாம்

15 ஆண்டு பாலிசியில், 6 ஆண்டுகள், 9 ஆண்டுகள் மற்றும் 12 ஆண்டுகள் முடித்த பிறகு, 20-20 சதவிகிதம் பணம் திரும்ப கிடைக்கிறது. மீதமுள்ள 40 சதவீத பணம் முதிர்வுக்கான போனஸுடன் வழங்கப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2021, 05:02 PM IST
  • அவ்வப்போது பணம் தேவைப்படுபவர்களுக்கு இந்தக் திட்டம் மிகவும் பயனுள்ளது.
  • 15 ஆண்டு பாலிசியில், 6 ஆண்டுகள், 9 ஆண்டுகள் மற்றும் 12 ஆண்டுகள் முடித்த பிறகு, 20-20 சதவிகிதம் பணம் திரும்ப கிடைக்கிறது.
  • மீதமுள்ள 40 சதவீத பணம் முதிர்வுக்கான போனஸுடன் வழங்கப்படும்.
தினம் ₹95 சேமித்தால் போதும்; விரைவில் லட்சாதிபதியாகலாம் title=

புதுடெல்லி: வருமானம் அதிகம் தரும் பல ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை தபால் நிலையம் தொடக்கியுள்ளது. இந்த திட்டங்களில் ஒன்று கிராம சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் (Gram Sumangal Rural Postal Life Insurance Scheme). இது ஒரு எண்டோவ்மென்ட் பாலிஸி (Endowment Policy) திட்டமாகும், இது கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளது. இதில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன.

இந்த திட்டத்தின் கீழ்  நீங்கள் ஒரு நாளைக்கு ரூ ₹95 க்கு முதலீடு செய்தால், போதும்.திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ₹14 லட்சம் கிடைக்கும். 1995 ஆம் ஆண்டில் கிராம தபால் ஆயுள் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 6 வெவ்வேறு காப்பீட்டு திட்டங்களை தபால் அலுவலகம் வழங்குகிறது. இவற்றில் ஒன்று கிராம சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம்

அவ்வப்போது பணம் தேவைப்படுபவர்களுக்கு இந்தக் திட்டம் மிகவும் பயனுள்ளது. மனி பேக் பாலிஸியான இந்த  கிராமம் சுமங்கல் யோஜனா  திட்டத்தில் அதிகபட்சமாக ரூ .10 லட்சம் உறுதி தொகையாக உள்ளது. பாலிசியை எடுத்துக் கொண்ட பிறகு பாலிசி காலத்தில் நபர் இறக்கவில்லை என்றால், மனி பேக் பலனையும் அவர் பெறுகிறார். பாலிஸி எடுத்த நபர் இறந்து விட்டால், அவரது நாமினிக்கு போனஸும் வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச வயது 19 ஆண்டுகள். அதிகபட்சம் 45 வயது . இந்த திட்டத்தை 15 வருட காலத்திற்கு அல்லது 20 வருட காலத்திற்கு எடுக்கலாம். 

ALSO READ | பெட்ரோல்-டீசல் விலை குறையுமா; பெட்ரோலிய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

15 ஆண்டு பாலிசியில், 6 ஆண்டுகள், 9 ஆண்டுகள் மற்றும் 12 ஆண்டுகள் முடித்த பிறகு, 20-20 சதவிகிதம் பணம் திரும்ப கிடைக்கிறது. மீதமுள்ள 40 சதவீத பணம் முதிர்வுக்கான போனஸுடன் வழங்கப்படும். இதேபோல், 20 ஆண்டு பாலிசியில், 20-20 சதவீதம் பணம் 8 ஆண்டுகள், 12 ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகள் முடிந்த உடன் கிடைக்கிறது. மீதமுள்ள 40% பணம் முதிர்ச்சி காலத்தில் போனஸுடன் வழங்கப்படும். போனஸ் மட்டுமே ₹7 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

இதற்கான பிரீமியம் தொகை நாள் ஒன்றுக்கு  ₹95 மட்டுமே, 25 வயதான ஒருவர்   ₹7 லட்சத்திற்கான  பாலிஸியை  20 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொண்டால், அவர் மாதத்திற்கு  ₹2853 பிரீமியம் செலுத்த வேண்டும், அதாவது ஒரு நாளைக்கு சுமார்  ₹95 மட்டுமே. காலாண்டு பிரீமியம்₹8449 ஆகவும், அரை ஆண்டு பிரீமியம் ₹16715 ஆகவும், ஆண்டு பிரீமியம் ₹32735 ஆகவும் இருக்கும்.

பாலிசியின் 8, 12 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில், 20-20 சதவீதத்திற்கு ஏற்ப ரூ ₹1.4-₹1.4 லட்சம் என்ற அளவில் செலுத்தப்படும். இறுதியாக, 20 ஆம் ஆண்டில், 2.8 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். ₹7 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகையில் ஆண்டு போனஸ் ₹33600 ஆகும். அதாவது, முழு பாலிசி காலத்திற்கான போனஸ் அதாவது 20 ஆண்டுகளுக்கான போனஸ் ₹ 6.72 லட்சம் ரூபாய். 20 ஆண்டுகளில் மொத்தம் ரூ .3.72 லட்சம் வருவாய் கிடைக்கும். இதில் ₹ 4.2 லட்சம் முன்கூட்டியே பெறப்படும் பணமாகவும், ₹9.52 லட்சம் முதிர்ச்சியிலும் ஒரே நேரத்தில் வழங்கப்படும்.

ALSO READ | தீராத பண பிரச்சனையா...கவலை வேண்டாம்.. இந்த நான்கு விஷயங்களை கடைபிடித்தால் போதும் ..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News