புதுடெல்லி: பிப்ரவரி 1, 2024 அன்று, 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். 2019 ஆம் ஆண்டிலிருந்து அவர் தொடர்ந்து ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தியாவின் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு முன், நாட்டின் பழைய யூனியன் பட்ஜெட்களைப் பற்றிய அதிகம் அறியப்படாத வரலாற்றையும் விவரங்களை தெரிந்துக் கொள்வோம்..
இந்தியாவில் முதல் யூனியன் பட்ஜெட்
ஏப்ரல் 7, 1860 இல் இந்தியாவில் முதல் யூனியன் பட்ஜெட் ஸ்காட்டிஷ் பொருளாதார வல்லுநரும் அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் பிரிட்டிஷ் அரசின் இந்தியாவிற்கான முதல் பட்ஜெட்டை அறிமுகப்படுத்தினார் என்றால், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியால் தாக்கல் செய்யப்பட்டது.
1950 வரை ராஷ்டிரபதி பவனில் அச்சிடப்பட்டப்பட்டு வந்த பட்ஜெட் அச்சிடும் இடம் மாற்றப்பட்டது. பட்ஜெட் தகவல்கள் கசிந்ததை அடுத்து, புதுடெல்லி மின்டோ சாலையில் உள்ள அச்சகத்திற்கு மாற்றப்பட்டது. பிறகு 1980 ஆம் ஆண்டில், நார்த் பிளாக்கில் அரசாங்க அச்சகம் நிறுவப்பட்டது, தற்போது பட்ஜெட் நிதி அமைச்சகத்தின் தலைமையகமான நார்த் பிளாக்கில் அச்சிடப்படுகிறது.
மேலும் படிக்க | பட்ஜெட் தாக்கலுக்கு மின் அல்வா தயாரிக்கப்படுவது ஏன்... சுவாரஸ்ய தகவல்!
பட்ஜெட் தாக்கல் கால அளவு
பிப்ரவரி 1, 2020 அன்று மத்திய பட்ஜெட் 2020–21 சமர்ப்பிப்பின் போது நிர்மலா சீதாராமன் மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். அந்தச் சந்தர்ப்பத்தில், நிதி அமைச்சர் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசினார்.
1991 ஆண்டு, பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசில், அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் 18,650 வார்த்தைகளைக் கொண்ட வார்த்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தி சாதனை படைத்தார். 2018 ஆம் ஆண்டில், வார்த்தைகளின் எண்ணிக்கையில் இரண்டாவது நீண்ட உரையை அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார், மொத்தம் 18,604 வார்த்தைகள். ஜெட்லி 1 மணி நேரம் 49 நிமிடங்கள் பேசினார்.
இந்தியாவின் மிகக் குறுகிய பட்ஜெட் உரை
இந்தியாவின் மிகக் குறுகிய பட்ஜெட் உரை 1977 இல் நிதி அமைச்சர் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் 800 வார்த்தைகள் மட்டுமே நீடித்தது.
அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த பெருமை
இந்தியாவில் அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த பெருமை முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு சொந்தமானது. 1962 முதல் 1969 வரை நிதியமைச்சராக இருந்த போது, தேசாய் மொத்தம் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். சிதம்பரம் (9), பிரணாப் முகர்ஜி (8), யஷ்வந்த் சின்ஹா (8), மன்மோகன் சிங் (6).
பட்ஜெட் தாக்கல்
1999 ஆம் ஆண்டுக்கு முன், ஆங்கிலேயர் காலத்தின் நடைமுறையைப் பின்பற்றி பிப்ரவரி கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 1999 ஆம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரத்தை காலை 11 மணியாக மாற்றினார்.
2017 ஆம் ஆண்டில், மாதத்தின் கடைசி வேலை நாளைப் பயன்படுத்தும் காலனித்துவ கால பாரம்பரியத்திலிருந்து விலகி, பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நடைமுறையை அருண் ஜெட்லி தொடங்கினார்.
மேலும் படிக்க | மத்திய அரசின் இலவச காப்பீடு... ஆயுஷ்மான் அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை!
பட்ஜெட் தாக்கல் செய்யும் மொழி
பட்ஜெட் ஆவணங்களை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட காங்கிரஸ் தலைமையிலான அரசு முடிவு செய்வதற்கு முன்புவரை, யூனியன் பட்ஜெட் 1955 வரை ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
காகிதம் இல்லா பட்ஜெட்
2021-22 ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக காகிதமில்லாத வடிவத்தில் நடத்தப்பட்டு சாதனை படைத்தது.
இந்தியாவில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முதல் பெண்
1971 ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் மற்றும் நிதியமைச்சராகப் பணியாற்றிய இந்திரா காந்தி, நாட்டில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். 2019 ஆம் ஆண்டில், பட்ஜெட்டை தாக்கல் செய்த இரண்டாவது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார்.
நிர்மலா சீதாராமன், வழக்கமாக பட்ஜெட்டை நிதியமைச்சர்கள் பிரீஃப்கேஸில் எடுத்துச் செல்லும் முறையை மாற்றி, தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட கோப்பு உறையில் தனது உரை மற்றும் பிற ஆவணங்களை எடுத்து வந்தார்.
மேலும் படிக்க | UNION BUDGET 2024: சாமானியர்கள் எதிர்பார்க்கும் சில வரிச்சலுகைகள்... நிறைவேறுமா... நிராசையாகுமா...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ