பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கான ஆயத்தங்களை மறுஆய்வு செய்வதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை வங்கிகளை ஒன்றிணைக்கும் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அரசுக்கு சொந்தமான 10 பொதுத்துறை வங்கிகளை நான்காக ஒருங்கிணைக்க ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மார்ச் 12-ஆம் தேதி வங்கிகளை இணைப்பதற்கான திட்டமிடல் மற்றும் தயார்நிலை குறித்து நிதி அமைச்சர் மதிப்பாய்வு செய்வார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயர்மட்டக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்க வங்கிகளின் தயார்நிலை மற்றும் பொருளாதாரத்தின் உற்பத்தித் துறைகளுக்கு கடன் ஓட்டத்தை உறுதி செய்தல் போன்ற மட்டங்களின் நிலை குறித்து அமைச்சர் மதிப்பாய்வு செய்ய காத்திருப்பதாக தெரிகிறது.
இணைப்பிற்குப் பிறகு வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகள் மற்றும் தயாரிப்புகளை வழங்குவதற்கான ஆயத்தத்தையும் இந்த சந்திப்பு மதிப்பாய்வு செய்யும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடன் மற்றும் வைப்பு வளர்ச்சி, மற்றும் இணைப்புகளுக்குப் பிறகு ஆண்டு வாரியான சினெர்ஜி உணர்தல் உள்ளிட்ட வணிக மற்றும் நிதித் திட்டங்களையும் இந்த கூட்டம் விவாதிக்கும்.
பொதுத்துறை வங்கிகள் இணைப்புகள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா (யுபிஐ) ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) இணைக்கப்படும். இந்த நடவடிக்கை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு (எஸ்.பி.ஐ) அடுத்தபடியாக பி.என்.பி இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக மாறும்.
சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டு, இந்தியாவின் நான்காவது பெரிய பொதுத்துறை வங்கியை உருவாக்குகிறது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஆந்திர வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை ஒன்றிணைந்து ஐந்தாவது பெரிய பொதுத்துறை வங்கியை உருவாக்குகின்றன. அதேவேளையில் இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி ஆகியவை இந்தியாவின் ஏழாவது பெரிய பொதுத்துறை வங்கியாக உருவாகும்.
மெகா ஒருங்கிணைப்பு உலகளாவிய வங்கிகளுடன் ஒப்பிடக்கூடிய அளவிலும், இந்தியாவிலும் உலக அளவிலும் திறம்பட போட்டியிடும் திறன் கொண்ட வங்கிகளை உருவாக்க உதவும் எனவும் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவை பாங்க் ஆப் பரோடாவில் இணைக்கப்பட்டன. இதற்கு முன்னர், எஸ்பிஐ மற்றும் பாரதிய மஹிலா வங்கியின் ஐந்து இணை வங்கிகளை எஸ்பிஐ உடன் அரசாங்கம் இணைத்தது குறிப்பிடத்தக்கது.