NPS withdrawal rule: தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) சமீபத்தில் அறிமுகப்படுத்திய சில புதிய விதிமுறைகளால் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. நீண்ட கால முதலீட்டுத் திட்டமாக, விளங்கும் என்பிஎஸ் திட்டம் அதன் முதலீட்டாளர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் மொத்தத் தொகை மற்றும் ஓய்வூதியம் இரண்டையும் வழங்கி வருகின்றது. இருப்பினும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் என்பிஎஸ் கணக்கிலிருந்து பணத்தை திரும்ப பெற முடியாது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) இந்த ஆண்டு, தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து(என்பிஎஸ்) பணத்தை ஓரளவு திரும்பப் பெறுவது தொடர்பான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய விதிகளின்படி மத்திய அரசு, மாநிலம் மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் என்பிஎஸ் கணக்குதாரர்கள், ஜனவரி 1, 2023 முதல் தங்கள் சம்பந்தப்பட்ட நோடல் அதிகாரி மூலம் கணக்கிலிருந்து பகுதியளவு திரும்பப் பெற விண்ணப்பிக்க வேண்டும். பகுதியளவு திரும்ப பெறுவதற்கான வசதி ஆன்லைனில் வழங்கப்படுகிறது, எனவே தனியார் துறையைச் சேர்ந்தவர்களும் பகுதியளவு திரும்பப் பெறுவதற்கான வசதியை ஆன்லைனிலேயே செய்துகொள்ள முடியும். என்பிஎஸ் கணக்கிலிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவும் T4 இலிருந்து T2 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, அதாவது திரும்பப்பெறும் செயலமுறையானது நான்கு நாட்களுக்குப் பதிலாக, இப்போது இரண்டு நாட்களில் முடிவடையும் என்று பொருள். அமைப்பின் இந்த புதிய விதிகள் மக்களை குழப்பமடைய செய்திருக்கிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பின் விதிகளின்படி, என்பிஎஸ் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க திட்டமிட்டால், மூன்று முறை மட்டுமே எடுக்க முடியும் என்பதையும், மொத்த பங்களிப்பில் 25 சதவீதத்தை மட்டுமே திரும்பப் பெற முடியும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுவோருக்கு மிகப்பெரிய அப்டேட், அரசு செய்ய புதிய மாற்றம்
குழந்தைகளின் உயர் கல்வி, குழந்தைகளின் திருமணம், பிளாட் வாங்குதல், கட்டுமானம், கடுமையான நோய் போன்ற பிற முக்கியமான தேவைகளுக்காக என்பிஎஸ் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். புதிய ஓய்வூதிய முறையை மாற்றக்கோரி பல ஊழியர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய முறைக்கு மாறிவிட்டது. என்பிஎஸ் திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள எவரும் முதலீடு செய்து அவர்களின் ஓய்வுக்கு பிறகான காலத்தில் பயனடையலாம். இந்த திட்டத்தின் முதிர்ச்சியின்போது நீங்கள் இதிலுள்ள 60% பணத்தை எடுத்துக்கொண்டு, மீதமிருக்கும் 40% தொகையை வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்து மாதந்தோறும் ஓய்வூதிய வடிவத்தில் வருமானத்தை பெறலாம்.
என்பிஎஸ் திட்டத்தின் கீழ், வருமான வரித் துறையின் பிரிவு 80சி மற்றும் 80சிசிடி-ன் கீழ் வரி விலக்கு பெறலாம். ஓய்வூதியம் இல்லாத மக்கள் கூட என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதந்தோறும் ஓய்வூதியத்தை பெற்று பயனடையலாம். உதாரணமாக 26 வயதாகும் ஒரு நபர், அவரது 60 வயது வரை என்பிஎஸ் திட்டத்தில் மாதம் ரூ.4000 முதலீடு செய்யும்போது அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.35,000க்கு மேல் கிடைக்கும், இந்த திட்டத்தில் 11% வட்டி கணக்கிடப்படுகிறது. 60 வயது வரை அவரின் மொத்த பங்களிப்பு ரூ.16,32,000 ஆகவும், மொத்த கார்பஸ் ரூ.1,77,84,886 ஆகவும் இருக்கும்.
மேலும் படிக்க | EPFO மிகப்பெரிய அப்டேட்: அதிகரிக்கிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ