நான்காம் நாளாக தொடர்ந்து உயர்வு காணும் பெட்ரோல், டீசல் விலை!

ஈரான் - அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான பனிபோருக்கு மத்தியில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது!

Last Updated : Jan 5, 2020, 12:42 PM IST
நான்காம் நாளாக தொடர்ந்து உயர்வு காணும் பெட்ரோல், டீசல் விலை! title=

ஈரான் - அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான பனிபோருக்கு மத்தியில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது!

ஈரானிய உயர்மட்ட ஜெனரல் காசெம் சோலைமணியை அமெரிக்கா கொன்ற பின்னர் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) தொடர்ந்து நான்காவது நாளாக உயர்த்தப்பட்டது. சோலைமானியின் மரணத்திற்குப் பிறகு மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து உலக பங்குச் சந்தைகளில் பெருமளவு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தரவின் படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 பைசா மற்றும் டீசல் விலை 11 பைசா அதிகரித்துள்ளது. விலை திருத்தத்திற்குப் பிறகு, டெல்லி மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் சனிக்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் முறையே லிட்டருக்கு ரூ.75.45-ஆகவும், லிட்டருக்கு ரூ.68.40-ஆகவும் இருந்தது.

ஜனவரி 02, 2020 துவங்கி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 38 பைசா அதிகரித்துள்ளது, டீசல் விலை 55 பைசா அதிகரித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் ரூபாய்-அமெரிக்க டாலர் மாற்று விகிதத்தை சார்ந்துள்ளது, ஏனெனில் இந்தியா தனது கச்சா தேவைகளில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இந்தியா தனது எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்ய இறக்குமதியை 84 சதவீதம் சார்ந்துள்ளது, மேலும் எந்தவொரு உலகளாவிய விலைகளும் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கிற்கு மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்துள்ளன. குறிப்பாக ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தினசரி மதிப்பாய்வு செய்கின்றன. காலை 6 மணி முதல் அமல்படுத்தப்படும் வகையில் எரிபொருள் நிலையங்களில் விலை திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன. உள்நாட்டு எரிபொருள் விலைகள் சர்வதேச கச்சா எண்ணெய் விகிதங்கள் மற்றும் ரூபாய் டாலர் அந்நிய செலாவணி விகிதங்களால் பரவலாக நிர்ணயிக்கப்படுகின்றன மற்றும் தினசரி அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய பெட்ரோல்/ டீசல் விலை நிலவரம்.

சென்னை _____ பெட்ரோல் - ₹ 78.48 _____ டீசல் - ₹ 72.39
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 75.45 _____ டீசல் - ₹ 68.40
மும்பை _______ பெட்ரோல் - ₹ 81.13 _____ டீசல் - ₹ 71.84
கொல்கத்தா __பெட்ரோல் - ₹  78.13_____ டீசல் - ₹ 70.87

Trending News