தபால் அலுவலகத்தின் பால் ஜீவன் பீமா திட்டம்: நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக, பல்வேறு திட்டங்கள் அரசு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த பிரபலமான திட்டங்களில் ஒன்று தபால் அலுவலகத்தின் பால் ஜீவன் பீமா திட்டம் ஆகும். இந்த திட்டம் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் கீழ் இயங்குகிறது மற்றும் இந்தத் திட்டத்தின் கீழ், மெச்சூரிட்டி காலத்தின் போது ரூ. 3 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும். நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல காப்பீட்டுத் திட்டத்தை எடுக்க யோசி வைத்து இருந்தால், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள என்ன தகுதி வேண்டும்?
இத்திட்டத்தில் பயன்பெற, குழந்தைக்கு குறைந்தபட்சம் 5 வயதும், அதிகபட்ச வயது 20 வயதும் இருக்க வேண்டும். இது தவிர, பாலிசிதாரரின் (பெற்றோர்) வயது 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல் இத்திட்டத்தின் பலனை 2 குழந்தைகள் வரையே வழங்கப்படும்.
மேலும் படிக்க | போஸ்ட் ஆபிஸ் மூலம் கடன் பெறலாம்! இதை செய்தால் மட்டும் போதும்!
அதுவே கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் (RPLI) கீழ் பாலிசி எடுக்கப்பட்டால், பாலிசிதாரர் ரூ. 1 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைப் பெறுவார். இது தவிர, அஞ்சலக ஆயுள் காப்பீட்டின் கீழ் ரூ.3 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?
* பாலிசிதாரர் மெச்சூரிட்டிக்கு முன் இறந்துவிட்டால், மீதமுள்ள பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* குழந்தை இறந்தால், உறுதி செய்யப்பட்ட போனஸ் உடன் நாமினிக்கு உறுதியளிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.
* மெச்சூரிட்டியடைந்தவுடன், அனைத்துப் பணமும் பாலிசிதாரருக்கு வழங்கப்படும்.
* இந்த பாலிசியை 5 ஆண்டுகளுக்கு வழக்கமான பிரீமியத்தை செலுத்திய பிறகு பேய்ட்-அப் பாலிசியாக மாறிக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் கடன் வாங்க முடியுமா?
மற்ற பாலிசிகளைப் போல, இந்தத் திட்டத்தில் பெற்றோர்கள் கடன் வாங்க முடியாது. அத்துடன் குழந்தைகளுக்கு இந்த பாலிசி எடுக்கும்போது மருத்துவ பரிசோதனை தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 7th Pay Commission: 2023-ல் அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பார்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ