RBI Update: சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரூ. 500 தொடர்பான புதிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதன் பிறகு மக்களின் பதற்றம் அதிகரித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வந்தது முதல், இன்னும் பல ரூபாய் நோட்டுகள் பற்றிய பல வித செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக 500 ரூபாய் நோட்டு பற்றி பல வதந்திகள் கிளம்பியுள்ளன. எனினும், மக்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து வரும் அறிவிப்புகள் மற்றும் செய்திகளைத் தான் நம்ப வேண்டும் என்றும் ஆதாரமற்ற வதந்திகளை நம்பக்கூடாது என்றும் இந்திய அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
500 ரூபாய் நோட்டு
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) ரூ.2000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து நிறுத்தியது. அதன் பின்னர் தற்போது ரூ.500 நோட்டுகள் தொடர்பான புதிய சவால் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆண்டறிக்கையில் ரூ.500 நோட்டுகள் தொடர்பான பெரிய பிரச்சினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.2000 நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.500 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு (RBI) கடும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன. இந்த அறிக்கையின்படி, போலியான ரூ.500 நோட்டுகளின் ஊடுருவலில் நிலையான அதிகரிப்பு காணப்படுகிறது. 2022-23 நிதியாண்டில், சுமார் 91 ஆயிரத்து 110 போலி 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது முந்தைய 2021-22 ஆண்டை விட 14.6 சதவீதம் அதிகமாகும்.
இரு நிதியாண்டுகளையும் ஒப்பிட்டு பார்த்தால், 2020-21 நிதியாண்டில் 39,453 போலி 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதே நேரத்தில் 2021-22 இல் இந்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் போலி நோட்டுகளின் எண்ணிக்கை ரிசர்வ் வங்கிக்கு பெரும் கவலையாக மாறியுள்ளது.
தன் சிக்கலை பகிர்ந்த ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் தனது ஆண்டறிக்கையில் நாட்டில் அதிகரித்து வரும் ரூ.500 மற்றும் ரூ.2000 போலி நோட்டுகள் பற்றிய கவலையான தகவலை பகிர்ந்துள்ளது. ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, தற்போது ரூ.500 நோட்டுகள் அதிக அளவில் மோசடி செய்பவர்களின் இலக்காக உள்ளது.
மேலும் படிக்க | Paytm பங்குகள் விலை 20% சரிவு... காரணங்கள் இவை தான்!
கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
2022-23 நிதியாண்டில், போலியான 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, சுமார் 91 ஆயிரத்து 110 போலி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டை விட 14.6% அதிகமாகும். மாறாக, போலியான ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கையில் 28% சரிவு காணப்பட்டது, இது 9,806 நோட்டுகளாக இருந்தது.
100, 50, 20, 10 ஆகிய போலி நோட்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. குறிப்பாக ரூ.20 போலி நோட்டுகளின் எண்ணிக்கை 8.4% அதிகரித்துள்ளது.
ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி செலவிட்ட தொகை இதுதான்
ரிசர்வ் வங்கி 2022-23ல் நோட்டுகளை (Currency Notes) அச்சடிக்க மொத்தம் ரூ.4,682.80 கோடி செலவிட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவாகும். மார்ச் 31, 2023 நிலவரப்படி, நாட்டின் மொத்த கரன்சி புழக்கத்தில் ரூ.500 நோட்டுகளின் பங்கு 37.9% ஆகவும், ரூ.10 நோட்டுகளின் பங்கு 19.2% ஆகவும் இருந்தது. கள்ள நோட்டுகளை கண்டறிந்து அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுவது ரிசர்வ் வங்கிக்கு முக்கியமான சவாலாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.
கள்ள நோட்டுகளின் ஊடுருவலைத் தடுத்து, குடிமக்களின் நம்பிக்கையை நிலைநாட்டி, இந்தச் சூழலைச் சமாளிக்க ரிசர்வ் வங்கியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொது மக்களும் விழிப்புடன் இருக்கவும், போலி நோட்டுகளை அடையாளம் காணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ