இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஓர் ரயில் சேவை. வந்தே பாரத் ரயில்கள் தற்போது 60க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) டிசம்பர் 30 அன்று அயோத்தியில் இருந்து வந்தே பாரத் போன்ற வேகத்தில் குறைந்த கட்டணத்தில் இயங்கும் 2 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் ரயில் மற்றும் அம்ரித் பாரத் ரயில் வேகம் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த புதிய ரயில்களும் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். முதல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை டிசம்பர் 30ஆம் தேதி அதாவது இன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் அயோத்தியை சீதா மாதா பிறந்த பீகாரில் உள்ள சீதாமர்ஹியை இணைக்கும். இந்த ரயிலின் வழி பீகாரில் உள்ள தர்பங்காவிலிருந்து அயோத்தி வழியாக டெல்லிக்கு செல்லும். இன்று மற்றொரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மால்டாவில் இருந்து பெங்களூரு செல்லும்.
6 புதிய வந்தே பாரத் ரயில்கள்
பிரதமர் மோடி 6 புதிய வந்தே பாரத் ரயில்களை டிசம்பர் 30 ஆம் தேதி அதாவது இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த 6 புதிய வந்தே பாரத் ரயில்களில், கோயம்புத்தூர்-பெங்களூரு வந்தே பாரத் அயோத்தி-ஆனந்த் விஹார் வந்தே பாரத், புது தில்லி-வைஷ்ணோ தேவி வந்தே பாரத், மங்களூர்-மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ்-புது டெல்லி வந்தே பாரத், ஜல்னா-மும்பை வந்தே பாரத் ஆகியவை அடங்கும்.
கோயம்புத்தூர்-பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரம் மற்றும் பாதை
கோயம்புத்தூர்-பெங்களூரு வந்தே பாரத் ரயில் கோயம்புத்தூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு, ஓமலூர் (காலை 7:40), தருமபுரி (காலை 8:30), ஓசூர் (காலை 10:05), காலை 11:30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அரை அதிவேக ரயில் பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் இடையே பயண நேரத்தை சுமார் ஆறு மணி நேரமாகக் குறைக்கும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, தருமபுரி மற்றும் ஓசூர் ஆகிய நிலையங்கள் வழியாக செல்லும்.
மறுமார்க்கத்தில் பகல் 1.40 மணிக்கு பெங்களூருவில் புறப்படும் வந்தே பாரத் ரயில்கள் அன்றைய நாளே, இரவு 8 மணிக்கு கோயம்புத்தூர் வந்தடையும். இந்த ரயில் சேவை நாள்தோறும் இரண்டு சேவைகள் அளிக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. தொழில் நகரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த நேரத்தில் இயக்கப்படும் மற்ற வந்தே பாரத் ரயில்கள் அயோத்தி-ஆனந்த் விஹார், புது தில்லி- எஸ்எம்விடி கத்ரா, புது தில்லி-அமிர்தசரஸ் மற்றும் மும்பை-ஜல்னா. புதிய வந்தே பாரத் ரயில்களின் வணிகச் செயல்பாடுகள் டிசம்பர் 31ஆம் தேதி தொடங்குகின்றன.
வந்தே பாரத் ரயில்கள் மூலம் 6.30 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும் என்பதால், தொழில்துறையினர், வியாபாரிகளுக்கும், டெக் பணியாளர்களுக்கும் இந்த ரயில் சேவை மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. கர்நாடகத்தை இணைக்கும் 4 ஆவது வந்தே பாரத் ரயிலாக இந்த ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் தார்வாட், பெலகாவி, ஹுப்பள்ளி, சென்னை, மைசூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் உள்ளன. பெங்களூரு - தார்வாட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சமீபத்தில் இந்திய ரயில்வேயால் பெலகாவி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய அயோத்தி விமான நிலையம்
வந்தே பாரத் ரயில்கள் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களை தவிர மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தையும் திறந்து வைத்தார். இங்கு புதிய அயோத்தி விமான நிலையத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். மேலும், இங்கு 4 புதிய மறுவடிவமைப்பு மற்றும் அகலப்படுத்தப்பட்ட சாலைகளை பிரதமர் திறந்து வைக்கிறார். 15,700 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் படிக்க | Best Tourist Places: மதுரைக்கு அருகில் உள்ள சிறந்த சுற்றுலா தளங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ