ஆன்லைனில் எஸ்பிஐ எஃப்டி கணக்கு: நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் தலைவலியாக உள்ளது. கடந்த 5 மாதங்களில், ரிசர்வ் வங்கி அதன் ரெப்போ விகிதத்தை நான்கு முறை உயர்த்தியுள்ளது. தற்போது அது 4 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் ரெப்போ விகிதம் வங்கி வாடிக்கையாளர்களை நேரடியாகப் பாதிக்கிறது.
கடந்த சில மாதங்களில், வங்கிகள் தங்களுடைய நிலையான வைப்புத் திட்டம் (FD விகிதங்கள்), ஆர்டி திட்டம் மற்றும் சேமிப்பு கணக்குகள் ஆகியவற்றின் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தியுள்ளன. இது தவிர, வங்கிகள் தங்களது கடனுக்கான வட்டி விகிதங்களை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. டெபாசிட் விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் வங்கியில் எஃப்டி போட விரும்புகின்றனர். சமீபத்தில், பாரத ஸ்டேட் வங்கியும் அக்டோபர் 22 அன்று அதன் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான எஃப்டி-களில் 80 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்புக்குப் பிறகு நீங்களும் வங்கியில் எஃப்டி கணக்கைத் திறக்க விரும்பினால், அதற்காக நீங்கள் கிளைக்குச் செல்ல வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே எஸ்பிஐ எஃப்டி கணக்கை ஆன்லைனில் தொடங்கலாம். இதற்கு வங்கியின் நெட் பேங்கிங் இருந்தால் மட்டும் போதும். நீங்களும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் எஃப்டி கணக்கை வீட்டில் இருந்தபடியே தொடங்க விரும்பினால், நெட் பேங்க் மூலம் கணக்கைத் திறப்பதற்கான படிப்படியான செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க | PF வட்டியிலும் கை வைக்கும் மத்திய அரசு! ஊழியர்களுக்கு மற்றுமொரு கெட்ட செய்தி
எஸ்பிஐ ஆன்லைன் எஃப் கணக்கைத் திறக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- ஒரு FD கணக்கைத் திறக்க, முதலில் SBI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- இங்கே நீங்கள் முதலில் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு நெட் பேங்கிங்கில் லாக் இன் செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு, ஹோம் பேஜ் விருப்பத்திற்குச் சென்று டெபாசிட் ஸ்கீம்ஸ் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதற்குப் பிறகு நீங்கள் டெர்ம் டெபாசிட்டைத் தேர்ந்தெடுத்து e-FD விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இதன் பின்னர், நீங்கள் திறக்க விரும்பும் FD கணக்கின் வகையைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு Proceed விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதற்குப் பிறகு எந்தக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும் மற்றும் FD கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பிறகு FD இன் பிரின்சிபல் வேல்யூவை நிரப்பவும். நீங்கள் மூத்த குடிமகனாக இருந்தால், இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதற்குப் பிறகு, FD இன் முதிர்வு தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
- கடைசியாக Terms and Conditions -ஐ செலக்ட் செய்யவும்.
- பிறகு, சப்மிட் பட்டனை அழுத்தியவுடன் உங்கள் ஆன்லைன் FD திறக்கும்.
2 கோடிக்கும் குறைவான FD களுக்கு SBI இந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது:
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியானது அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டி-களுக்கு 3.00% முதல் 6.10% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான எஃப்டி- களுக்கு வங்கி அதிகபட்ச வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி 6.25% ஆகும். 1 வருட எஃப்டி-க்கு 6.10% வட்டி விகிதம் கிடைக்கிறது.
மேலும் படிக்க | ’ரேஷன் கார்டு தேவையில்லை’ கண்களை காட்டினால் ரேஷனில் பொருள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ