அதிர்ச்சித் தகவல்: பெட்ரோல் டீசல் விலை ₹6 வரை அதிகரிக்கலாம்..!!!

உங்கள் வாகன டாங்கை இன்றே நிரப்பி விடுங்கள்... பெட்ரோல்-டீசல் ₹6 வரை அதிகரிக்கலாம் என தகவல்கள் வந்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2020, 10:49 PM IST
  • பண்டிகை காலங்களில் ஏற்கனவே பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது, பெட்ரோல்-டீசல் விலை ஆறு ரூபாய் வரை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
  • சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 45 டாலரிலிருந்து 40 டாலராக குறைந்துள்ளது.
  • மாநில அரசுகளும் தங்கள் வருமானத்தை பெருக்க VAT எனப்படும் மதிப்பு கூட்டு வரியை அதிகரித்துள்ளனர்.
அதிர்ச்சித் தகவல்: பெட்ரோல் டீசல் விலை ₹6 வரை அதிகரிக்கலாம்..!!! title=

புதுடெல்லி: உங்கள் வாகன டாங்கை இன்றே நிரப்பி விடுங்கள்... பெட்ரோல்-டீசல் ₹6 வரை அதிகரிக்கலாம் என தகவல்கள் வந்துள்ளன.

பண்டிகை காலங்களில் ஏற்கனவே பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது, பெட்ரோல்-டீசல் (Petrol- Diesel) விலை ஆறு ரூபாய் வரை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் இரண்டிற்கும், கலால் வரியை மத்திய அரசு அதிகரிக்க உள்ளது. முன்னதாக, 2020, மே மாதத்தில், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ₹10 ஆகவும், டீசல் மீதான லிட்டருக்கு ₹13 ஆகவும் அரசாங்கம் உயர்த்தியது.

கொரோனா வைரஸுக்கு (Corona Virus) எதிராக ஒரு போரை நடத்தி வரும் அரசாங்கம், தற்போதைய சூழ்நிலையில், வருமானத்தை அதிகரிக்க இந்த கலால் வரி அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. தொற்றுநோயால் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பொருளாதாரத்தை புதுப்பிக்க மற்றும் இழப்பை ஈடுசெய்ய நிதி தேவை உள்ளது. மற்றொரு பொருளாதார நிவாரண திட்டத்தையும் அரசாங்கம் அறிவிக்கலாம். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியால் இதற்கான நிதி தேவை பூர்த்தி செய்யப்படும்

பொது மக்கள் மீதான சுமையை குறைப்பதற்கான ஒரு ஃபார்முலா குறித்து மத்திய அரசு (Central Government) யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 45 டாலரிலிருந்து 40 டாலராக குறைந்துள்ளது. இதை அரசு பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது.

ALSO READ | Good News: கிரெடிட் கார்டுகளுக்கும் வட்டிக்கு வட்டி தள்ளுபடி திட்டம் பொருந்தும்..!!!

பெட்ரோல் மற்றும் டீசல் கலால் வரி ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டால், மத்திய அரசின் வருவாய் ஆண்டுக்கு ₹13,000-14,000 கோடி அதிகரிக்கிறது. 

தற்போது, ​​நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில், ₹31.83 என்ற அளவிற்கு வரி உள்ளது. நாம் வாங்கும் ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் ₹31.83 வரி உள்ளது. 

மே 2014 க்கு முன்பு, பெட்ரோல் மீது லிட்டருக்கு மொத்தம் ₹9.48 வரி விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் டீசலுக்கு லிட்டருக்கு₹3.66 வரி விதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை. இது தவிர, மாநில அரசுகளும் (State Government) தங்கள் வருமானத்தை பெருக்க VAT எனப்படும் மதிப்பு கூட்டு வரியை அதிகரித்துள்ளனர்.

ALSO READ | தங்கம் வெள்ளி விலையில் கடும் சரிவு.. காரணம் என்ன.. மேலும் விலை குறையுமா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News