புது தில்லி: உற்பத்திப் பிரிவைத் தொடங்க வேண்டும் என்ற உங்களின் தொழில் முனைவோர் கனவில், துடைப்பம் தயாரிப்பில் சிறந்த வருமானத்திற்கான ஒரு வாய்ப்பு உள்ளது. இது குறைந்த முதலீட்டில் நீங்கள் தொடங்கக்கூடிய சிறந்த வணிகமாகும். உங்களிடம் 60,000 ரூபாய் இருந்தால் போதும். வணிதத்திற்கு தேவையான எஞ்சிய நிதியை கடன் மூலம் பெற்று துடைப்பம் தயாரிக்கும் வணித்தை தொடங்கலாம்.
துடைப்பம் அல்லது விளக்குமாறு அன்றாட வீட்டுத் தேவைகளில் முக்கியமான ஒன்று. அதனால், இதற்கான தேவை தொடர்ந்து இருக்கும். துடைப்பங்கள் பல்வேறு மட்டஙக்ளில் விநியோகிக்கப்படுகின்றன, மேலும் அவை சூப்பர் பஜார், பல சரக்கு கடைகள் மற்றும் பல்வேறு விற்பனை நிலையங்களில் உடனடியாகக் கிடைக்கின்றன. பொருளாதார இயக்கவியல் சராசரி செலவுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் நிலையில் சில பிராந்திய நிலையிலான தேவைக்கு ஏற்ற மாறுபாடுகளுடன், தொழிலை மேற்கொள்ளும் போது லாபத்தை அதிகரிக்கலாம் என்று KVIC கூறுகிறது.
இச்சூழலில், சுகாதார உணர்வுள்ள நுகர்வோருக்கு ஏற்ற வகையில், துடைப்பம் தயாரிக்கும் உற்பத்தி வணிகத்தில் (Business Idea) இறங்குவது, ஒரு லாபகரமான வணிக வாய்ப்பை அளிக்கிறது. கிராமோதய வேலை வாய்ப்பு திட்டத்திற்கான காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (KVIC) திட்ட விவரத்தின்படி, துடைப்பம் உற்பத்தி யூனிட்டை நிறுவ ஆகும் செலவு விபரங்களை அறிந்து கொள்ளலாம்:
கிராமோத்யோக் ரோஜ்கர் யோஜனா என்னும் கிராமோதய வேலை வாய்ப்பு திட்டத்திற்கான காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (KVIC) திட்ட விவரத்தின்படி, துடைப்பம் தயாரிக்கும் யூனிட்டை நிறுவுவதற்கான செலவுகள்:
துடைப்பம் தயாரிக்கும் திட்டத்திற்கான செலவு: ரூ 5.88 லட்சம்
1. நிலம் வாடகைக்கு/சொந்தமானது
2. கட்டிடம் & குடிமைப்பணி (1200 சதுர அடி): ரூ 2 லட்சம்
3. ஆலை மற்றும் இயந்திரம்: ரூ 1.50 லட்சம்
4. மரச்சாமான்கள் மற்றும் சாதனங்கள்: ரூ 45,000
5. துடைப்பம் தயாரிப்பதற்கான முந்தைய செலவுகள் - வேலை மூலதனத் தேவை: ரூ 1.93 லட்சம்
6. மொத்தம்: 5.88 லட்சம்
விளக்குமாறு தயாரிக்கும் திட்டத்திற்கான நிதி வழிமுறைகள்
1. சொந்த பங்களிப்பு @10%: ரூ 59,000
2. கால கடன்: ரூ 3.56 லட்சம்
3, பணி மூலதன நிதி: ரூ 1.74 லட்சம்
4. மொத்தம்: ரூ 5.88
KVIC திட்ட அறிக்கையின்படி, முதல் ஐந்து ஆண்டுகளில் முறையே 23.94 லட்சம், ரூ.28.62 லட்சம், ரூ.30.51 லட்சம், ரூ.32.31 லட்சம், ரூ.32.40 லட்சம் விற்பனையை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
KVIC ஆனது நிகர லாபம் முதல் ஐந்து ஆண்டுகளில் முறையே, ரூ.4.19 லட்சம், ரூ.5.07 லட்சம், ரூ.5.36 லட்சம், ரூ.5.57 லட்சம், ரூ.4.91 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மருத்துவ கூரியர் சேவை: ₹7 லட்சம் முதலீட்டில் மாதந்தோறும் ₹1-2 லட்சம் சம்பாதிக்கலாம்!
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையானது தகவல் நோக்கத்திற்காகவும், வாசகர்களுக்கு தொழில் திட்ட யோசனைகளை வழங்கும் நோக்கில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. கிடைக்கும் வருமான அளவுகள், குறிப்பிட்ட வகை தொழிலின் உதாரணத்தை வழங்குவதற்கான அனுமான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. Zee News கட்டுரை எந்த விதமான நிதி ஆலோசனைகளையும் வழங்க விரும்பவில்லை. எந்தவொரு முயற்சியையும் தொடங்குவதற்கு, நீங்கள் உங்கள் சொந்த விடாமுயற்சி மற்றும் சந்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ