Business Idea: லட்சங்களில் வருமானத்தை அள்ளித் தரும் தக்காளி சாஸ் பிஸினஸ்!

எல்லா காலங்களிலும் அதிக தேவை உள்ள தக்காளி கெட்ச்அப்  அல்லது தக்காளி சாஸ் உற்பத்தித் தொழிலை நீங்கள் தொடங்குவதன் மூலம் லட்சங்களை அள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 27, 2023, 01:42 PM IST
  • காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) வெளியிட்டுள்ள அறிக்கை
  • பெரிதும் விரும்பப்படும் தக்காளி கெட்ச்அப் அல்லது தக்காளி சாஸ்.
  • பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) மூலம் வணிக முயற்சிக்கான நிதியை பெறலாம்.
Business Idea: லட்சங்களில் வருமானத்தை அள்ளித் தரும்  தக்காளி சாஸ் பிஸினஸ்! title=

அனைத்து பருவங்களிலும் வருமானத்தை அள்ளிக் கொடுத்து, ஆண்டு முழுவதும் லாபம் தரும் தொழில் அல்லது வணிகத்தை தொடங்குவது குறித்து  நீங்கள் யோசித்து வருகிறீர்கள் என்றால், இந்த கட்டுரையை நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். உணவு பொருட்களுக்கான தேவை என்பது என்றும் குறையாதது என்பதில் ஐயம் ஏதும் இல்லை. அதில் அதிக தேவை உள்ள தக்காளி கெட்ச்அப்  அல்லது தக்காளி சாஸ் உற்பத்தித் தொழிலை நீங்கள் தொடங்கலாம். 

பெரிதும் விரும்பப்படும்  தக்காளி கெட்ச்அப்  அல்லது தக்காளி சாஸ் 

தக்காளி கெட்ச்அப்  அல்லது தக்காளி சாஸ் உற்பத்தி வணிகமானது கிராமப்புறங்கள் மற்றும் பரபரப்பான நகரங்களில் அதிக தேவை உள்ளது. இதற்கு அதிக டிமாண்ட் எப்போதுமே இருக்கும். இன்றைய நவீன கால கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சைடிஷ் என்றால் அது தக்காளி கெட்சப் தான். பாஸ்தா, பீட்சா, ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ், பிரட் டோஸ்ட், பிரட்,  பர்கர், தந்தூரி சிக்கன் என எல்லாவற்றுக்கும் சிறந்த காம்பினேஷன் தக்காளி கெட்சப் தான். சமோசா போன்ற சிற்றுண்டிகளுக்கு கூட அதற்கு தொட்டு கொள்ள, தக்காளி சாஸ் பெரிதும் விரும்பப்படுகிறது.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) வெளியிட்டுள்ள அறிக்கை

பருவங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும் பல வணிகங்களைப் (Business Idea) போலல்லாமல், தக்காளி கெட்ச்அப் வணிகமானது ஆண்டு முழுவதும் ஸ்திரமான வருமானத்தை தரும் தொழிலாக வழங்குகிறது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) தக்காளி கெட்சப் அல்லது சாஸ் தொடர்பான தொழில் சாத்தியக்கூறு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையான "இந்தியா கெட்ச் அப், பிஸ்ஸா & பாஸ்தா சாஸ் சந்தை அவுட்லுக், 2023" என்ற அறிக்கையில், தக்காளி கெட்ச்அப் சந்தைக்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்றும், நாடு முழுவதும் தற்போது தக்காளி கெட்ச்அப் மற்றும் சாஸ்களின் சந்தை ரூ.2000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.

மேலும் படிக்க | மருத்துவ கூரியர் சேவை: ₹7 லட்சம் முதலீட்டில் மாதந்தோறும் ₹1-2 லட்சம் சம்பாதிக்கலாம்!

தக்காளி கெட்ச்அப் வணிகத்திற்கு எவ்வளவு செலவாகும்?

திட்டச் செலவை KVIC பின்வருமாறு பிரித்துள்ளது

திட்டத்தின் மொத்த செலவு: ரூ 11.77 லட்சம்

தக்காளி கெட்ச்அப் வணிகத்திற்கான நிதி வழிமுறைகள்

1. சொந்த முதலீடு: ரூ 1.18 லட்சம்

2. வங்கி நிதி: ரூ 6.09 லட்சம்

3. செயல்பாட்டு மூலதன வரம்பு: ரூ 4.50 லட்சம்

KVIC ஆனது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மொத்த விற்பனையை 1 முதல் 5 ஆம் ஆண்டு வரை கணித்துள்ளது

முதல் ஆண்டில் ரூ.44 லட்சம்

2ம் ஆண்டில் ரூ.53.45 லட்சம்

3ம் ஆண்டில் ரூ.59.49 லட்சம்

4வது ஆண்டில் ரூ.65.72 லட்சம்

5வது ஆண்டில் ரூ.72.14 லட்சம்

நிகர லாபம் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா

நிகர லாபம் 1ஆம் ஆண்டில் ரூ.2.17 லட்சமாகவும், 2ஆம் ஆண்டில் ரூ.2.62 லட்சமாகவும், 3ஆம் ஆண்டில் ரூ.2.71 லட்சமாகவும், 4ஆம் ஆண்டில் ரூ.3.27 லட்சமாகவும், 5ஆம் ஆண்டில் ரூ.3.84 லட்சமாகவும் இருக்கும். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) மூலம் வணிக முயற்சிக்கான நிதியையும் நீங்கள் பெறலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையானது தகவல் நோக்கத்திற்காகவும், வாசகர்களுக்கு தொழில் திட்ட யோசனைகளை வழங்கும் நோக்கில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. கிடைக்கும் வருமான அளவுகள், குறிப்பிட்ட வகை தொழிலின் உதாரணத்தை வழங்குவதற்கான அனுமான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. Zee News கட்டுரை எந்த விதமான நிதி ஆலோசனைகளையும் வழங்க விரும்பவில்லை. எந்தவொரு முயற்சியையும் தொடங்குவதற்கு, நீங்கள் உங்கள் சொந்த விடாமுயற்சி மற்றும் சந்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.)

மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News