வரும் நாட்களில் நீங்களும் கூடுதல் வருமானம் ஈட்ட விரும்பினால், நல்ல லாபம் சம்பாதிக்ககூடிய தொழில் குறித்து இங்கே பார்க்கலாம். அனைத்து வீடுகளிலும் விரும்பி உண்ணும் இந்த உணவை உங்கள் தொழிலாக மாற்றினால், லட்சங்கள் உங்களைத் தேடி வரும். இதற்கு தேவையும் அதிகமாக இருக்கிறது. அது என்ன உணவு என்னவென்றால், ரொட்டி. காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் சாப்பிடப்படும் ரொட்டியை தயாரிக்கும் தொழிலை நீங்கள் மேற்கொள்ளலாம்.
ரொட்டி தயாரிப்பு
ரொட்டியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி உண்ணுகின்றனர். இந்த உணவை தயாரிப்பதை நீங்கள் ஒரு தொழிலாக மேற்கொள்ளலாம். மார்க்கெட்டில் ரொட்டிக்கான வரவேற்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இதனை நீங்கள் கணித்து, சரியான தொழிலாக நீங்கள் மாற்றினால், பணம் உங்களைத் தேடி வரும்.
மேலும் படிக்க | ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்யணுமா? இனி உங்கள் மொபைல் மூலமே செய்யலாம்!
வணிகத் திட்டம்
ரொட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நிலம், கட்டிடம், இயந்திரங்கள், மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் மற்றும் பணியாளர்கள் தேவை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்காக நீங்கள் பிரத்யேகமாக வணிக திட்டம் ஒன்றை உருவாக்கி வைத்து, அதனை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.
எவ்வளவு பணம் தேவைப்படும்?
சிறுதொழில் செய்தால் அதில் குறைந்த முதலீடு தேவைப்படும். மறுபுறம், நீங்கள் இந்த வணிகத்தை பெரிய அளவில் தொடங்கினால், உங்களுக்கு அதிக பணம் தேவைப்படும். சிறிய அளவில், 5 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். இது தவிர, 1000 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
பதிவு செய்ய வேண்டும்
ரொட்டி ஒரு உணவுப் பொருள் என்பதால் இந்தத் தொழிலைத் தொடங்க நீங்கள் பதிவு செய்ய வேண்டும். FSSAI அமைப்பிடம் உணவு வணிக இயக்க உரிமத்திற்கும் விண்ணப்பிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சாதாரண ரொட்டி பாக்கெட்டின் விலை ரூ.40 முதல் ரூ.60 வரை உள்ளது. அதே சமயம், அதை தயாரிப்பதற்கான செலவும் மிகக் குறைவு. பெரிய அளவில் ஒரே நேரத்தில் அதிக உற்பத்தி செய்தால், ஒரு மாதத்தில் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டலாம்.
மேலும் படிக்க | லக்ஷ்மண் நரசிம்மன்: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ