ரிலையன்ஸுக்கு பிறகு உலகின் மிக மதிப்புமிக்க இந்திய IT நிறுவனம் TCS

Tata Consultancy Services 10 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மதிப்பீட்டை எட்டிய இரண்டாவது இந்திய நிறுவனமாக மாறியது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 10, 2020, 01:27 AM IST
ரிலையன்ஸுக்கு பிறகு உலகின் மிக மதிப்புமிக்க இந்திய IT நிறுவனம் TCS

புதுடில்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனம், வெள்ளிக்கிழமை Accenture நிறுவனத்தை முந்தி, உலகின் மிக மதிப்புமிக்க ஐ.டி நிறுவனமாக மாறியது. 

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பிறகு சர்வதேச அளவில் இந்த உச்சத்தை எட்டிய இரண்டாவது நிறுவனம் TCS மட்டுமே. அக்டோபர் 8ஆம் தேதியின் தரவுகளின் படி, Accenture நிறுவனத்தின் சந்தை மூலதனம் 143.1 பில்லியன் டாலர்கள். TCS நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 144.7 பில்லியனாக இருந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குப் பிறகு ரூ .10 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மதிப்பீட்டை எட்டிய இரண்டாவது இந்திய நிறுவனம் TCS என்பது மதிப்பிற்குரிய விஷயமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்ல, கடந்த திங்களன்று TCS நிறுவனம் மற்றொரு பெரிய சாதனையையும் பதிவு செய்தது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளினால், மும்பை பங்குச் சந்தையில் (BSE) TCS நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு  69,082.25 கோடி ரூபாய் உயர்ந்து, வர்த்தகத்தின் முடிவில் ரூ .10,15,714.25 கோடியை எட்டியது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்குப் பிறகு ரூ .9 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மதிப்பீட்டைக் கொண்ட இரண்டாவது இந்திய நிறுவனமாக டிசிஎஸ் கடந்த மாதம் ஆனது. சந்தை மூலதனத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் இரண்டாவது மிக மதிப்புமிக்க உள்நாட்டு நிறுவனம் TCS என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டை தாண்டிய முதல் இந்திய நிறுவனம். இந்த வாரம் புதன்கிழமையன்று TCS நிறுவனம், சந்தையில் இருந்து 16,000 கோடி ரூபாயை திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்தது. இதன்படி, பங்கு (equity share) ஒன்றுக்கு 3,000 ரூபாய் என்ற மதிப்பில் பங்குகளை TCS வாங்கிக் கொள்ளும். 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளிலும், டிசிஎஸ் இதே அளவில் பங்குகளை திரும்ப வாங்குவதற்கான (buyback offers) நடைமுறையை மேற்கொண்டது. பங்கு பரிவர்த்தனை பொறிமுறையைப் (stock exchange mechanism) பயன்படுத்தி டெண்டர் (tender offer route) வழியாக பங்குகளை திரும்ப வாங்கும் நடைமுறை மேற்கொள்ளப்படும்.  

திரும்பப்பெறுதல் வாய்ப்பை வாங்கும் முடிவானது தபால் வாக்குப் பதிவு (postal ballot) மூலம் உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்குகளை திரும்பப்பெறும் நடவடிக்கை தொடர்பான தகவல்கள், காலக்கெடு மற்றும் பிற தேவையான விவரங்கள் அனைத்தும் உரிய நேரத்தில் பொது அறிவிப்பாக வெளியிடப்படும். 

உலகச் செய்திகள் உங்களுக்காக | Top 10 அக்டோபர் 09: உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திய இன்றைய தலைப்புச் செய்திகள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News