புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, ஸ்பெயின், ரஷ்யா, நோபல் பரிசு என பலவிதமான செய்திகளின் துளிகள்... இன்றைய உலக நடப்பை மேலோட்டமாக தெரிந்துக் கொள்ள இந்த கட்டுரையைப் படித்தால் போதும்...
- PoK பகுதியில் தரையில் இர்நுது விண்ணுக்கு ஏவுகணை ஏவும் தளத்தைக் கட்ட பாகிஸ்தானுக்கு சீன உதவுகிறது. கட்டுமான இடத்தில் 25 முதல் 40 சிவிலியன்கள் உட்பட 120 பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உள்ளனர்.
- ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரிக்கும் நிலையில், Madrid, அவசரகால லாக்டவுனை அறிவித்துள்ளது.
- "சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து ஏராளமான புகார்கள்" வந்ததை அடுத்து, மிகவும் பிரபலமான வீடியோ பகிர்வு சீன செயலியான TikTok-க்கு பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.
- தைவானின் விமானப்படையை ஊடுருவல்களால் அழிக்க முயற்சிக்கிறது சீனா என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். ஜனநாயக நாடான தைவானை தனது சொந்த பிரதேசம் என்று கூறும் சீனா, தைவானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 'கூட்டு' இருப்பதாக கூறி, தீவுக்கு அருகே தனது ராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
- தனது மருத்துவரிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் பிரச்சார பேரணியில் டிரம்ப் கலந்துக் கொள்வார் என்று வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வார இறுதியில் புளோரிடா மற்றும் பென்சில்வேனியாவில், டிரம்ப் பிரச்சார பேரணியை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
- ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகிறார்.
- வடகொரியாத் தலைநகர் பியாங்யோங்கில் நாளை பெரிய ராணுவ அணிவகுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணிவகுப்பில், நாட்டின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடம்பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.
கொரோனா வைரஸ் கவலைகளுக்கு மத்தியில் ராணுவ அணிவகுப்பை நடத்தும் வடகொரியா
- புதிய வேலைவாய்ப்பு சட்டத்தை ஆதரித்து பேசும் இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடோடோ, மக்கள் தவறான தகவல்களால் தூண்டப்பட்டு எதிர்ப்பதாக குறைகூறுகிறார். வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் சட்ட்த்திற்கு எதிர்ப்பு அவசியம் இல்லை என்று ஜோகோ விடோடோ கூறுகிறார். வதற்கான முக்கிய சட்டமாக உள்ளது.
- சில நாட்களுக்கு முன்பு, ரெஜெனெரான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் (Regeneron Pharmaceuticals) மருந்தை “கடவுளிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதம்” என்று அமெரிக்க அதிபர் கூறியதை அடுத்து, மருந்து பரிசோதனையில் பங்கேற்க பலர் முன்வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
- தென் கொரியாவில் 33 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 12 வது மாடியில் தீ தொடங்கியதாகவும் பின்னர் 136 வீடுகளைக் கொண்ட முழு கட்டிடத்திலும் பரவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 'மைக்ரோ எவல்யூஷன்' (microevolution) தற்போது மனித படைப்பில் சில மாறுதல்களை ஏற்படுத்தியிருப்பதாக கூறும் விஞ்ஞானிகள், இன்றைய குழந்தைகள் சற்று சிறிய தாடையுடனும், கால்களிலும் பாதங்களிலும் கூடுதல் எலும்புகளுடன் பிறக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
Read Also | Forbes India பணக்காரர்களின் பட்டியலில் 13வது ஆண்டாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR