கர்நாடகாவில், கடைகள், மால்கள், ஹோட்டல்கள் ஆகியவை 24 மணி நேரமும் இயங்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இனி அம்மாநில மக்கள், வருடத்தின் 365 நாட்களிலும், எந்த நேரம் வேண்டுமானாலும் கடைகள், மால்கள், ஹோட்டல்களுக்கு சென்று மகிழலாம்.
கொரோனா வைரஸால் (Corona Virus), பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால வேலை வாய்ப்புகள் பெருகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இதற்கு சில நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.
1. அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்திற்கு ஒரு நாள் என்ற வகையில் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். தேவைக்கு ஏற்றப்படி, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு கிழமை என அளிக்கலாம்.
2. ஊழியர்கள் ஒரு வாரத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற நிர்பந்திக்க கூடாது.
3. மேலும் ஒரு பணியாளர் 8 மணிக்கு மேல் பணி புரிந்தால் அவருக்கு ஓவர் டைமிற்கான பணம் கொடுக்க வேண்டும்.
4. ஒரு பணியாளர் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய நிர்பந்திக்க கூடாது.
5. பெண் ஊழியரை பொறுத்தவரை, இரவு நேரத்தில் பணி செய்ய அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதலை பெறுவதோடு, அவரது பாதுகாப்பையும் உறுதி செய்த பிறகே, அவரை பணி புரிய செய்ய வேண்டும்.
மேற்கண்ட விதிகளை மீறும் வர்த்தக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எழுக்கப்படும் எனவும் மாநில அரசு கூறியுள்ளது.
ALSO READ | கொரோனா தடுப்பூசியை பெற பதிவு செய்து கொள்வது எப்படி.. விபரம் உள்ளே..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR