எக்காலத்துக்கும் சுய தொழிலில் கிடைக்கும் மகிழ்ச்சி, நிம்மதி பிறரிடம் அல்லது பிறருக்காக செய்யும் தொழிலில் கிடைக்காது. பலருக்கு அப்படியான வாய்ப்புகள் அமையாவிட்டாலும், தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருக்கும். சிலருக்கு வேலையும் இருக்காது, முதலீடும் இருக்காது. என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டு காலத்தை வீணாக்குபவர்கள் அதிகம். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம், முதலீடே இல்லாமல் கூட இப்போது இருக்கும் உலகத்தில் நீங்கள் லட்சாதிபதியாகிவிடலாம்.
அதற்கு தேவை திறமை மட்டுமே. உங்களிடம் தனிப்பட்ட திறமை இருந்தாலோ அல்லது குறுகிய காலத்தில் நீங்கள் வளர்த்துக் கொண்டாலோ சோஷியல் மீடியா மூலம் விரைவாக நீங்கள் சம்பாதிக்க நினைக்கும் பணத்தை ஈட்டிவிடமுடியும். எழுத படிக்கத் தெரியாதவர்கள்கூட தங்களின் தனிப்பட்ட திறமை மூலம் லட்சக்கணக்கில் சமூக ஊடகங்கள் மூலம் சம்பாதித்து வருகின்றனர். காரணம் அவர்கள் தங்களிடம் இருக்கும் திறமை மூலம் சம்பாதிக்கின்றனர்.
மேலும் படிக்க | Post office scheme: ரூ.12,000 முதலீட்டில் ரூ.1 கோடி வரை பெற அறிய வாய்ப்பு!
சோஷியல் மீடியா மூலம் பல்வேறு வழிகளில் நீங்கள் சம்பாதிக்க முடியும். முகம் காட்டி சம்பாதிப்பது ஒரு வழி என்றால், முகம் காட்டாமலும், பிறருடைய கணக்கை நிர்வகிப்பதன் மூலமும் நீங்கள், அவர்களுக்கு இணையாக சம்பாதிக்கலாம். பத்து பேருக்கு வேலை வழங்கக்கூடிய நிலையை நீங்கள் அடையலாம். கூடுதலாக போட்டோஷாப் மற்றும் எடிட்டிங் கற்றுக் கொண்டால், உங்களுக்கான வாய்ப்புகள் பிரகாசம். அரசியல் கட்சிகளின் ஐடி விங்குகளில் கூட ஊதியத்துக்கு சேர்ந்து கொள்ளலாம். இப்போதெல்லாம், ஐடி விங் இல்லாத மாநிலக் கட்சிகளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
பிரபலமான நபர்களின் ஊடக கணக்குகளை சரியாக நிர்வகிக்கும் பணிக்கு கூட ஆட்கள் தேவைப்படுகின்றன. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் ஊரில் அல்லது தெரிந்த பிரபலங்களை நேரடியாக அணுகி சமூக ஊடக கணக்கை நிர்வகிக்கும் வாய்ப்பு பெற முயற்சி செய்யுங்கள். அவர் மூலம் இன்னும் ஒரு சிலரின் கணக்குகளை நிர்வகிக்கும் வாய்ப்பும் உருவாக்கிக் கொண்டீர்கள் என்றால், உங்களுக்கான ஊதியம் நிச்சயம் போதுமானதாக அல்லது எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும்.
மேலும் படிக்க | 6.42 லட்சம் மதிப்பிலான புதிய காரை அறிமுகம்படுத்தியது Tata
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ