சான் பிரான்சிஸ்கோ: உபெர் நிறுவனம் கிட்டத்தட்ட 3,700 ஊழியர்களை அல்லது அதன் பணியாளர்களில் சுமார் 14 சதவீதத்தை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் ஜூம் வீடியோ அழைப்பு மூலம் உரை நிகழ்த்திய உபெர் வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைவர் ருபின் சாவ்லேவ் (Ruffin Chaveleau) மூன்று நிமிடங்களுக்குள் ஒரு பொதுவான செய்தியுடன் "இன்று உங்கள் கடைசி வேலை நாளாக இருக்கும்" என்று அறிவித்துள்ளார்.
கடந்த வாரம், உபெர் டெக்னாலஜிஸ் சுமார் 3,700 முழுநேர ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது, COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மை மற்றும் நிறுவனத்தின் வணிகத்தில் அதன் தாக்கம் ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்டுள்ள செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக இந்த பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டது.
டெய்லி மெயில் (Daily Mail) மூலம் பெறப்பட்ட வீடியோ காட்சிகளில், அந்த நிறுவனத்தின் மேலாளர் கூறினார் "இன்று உபெருடனான உங்கள் கடைசி வேலை நாளாக இருக்கும் என்று கூறினார்.
இப்போது, COVID-19 காரணமாக சவாரி வணிகம் பாதிக்கும் மேலாக குறைந்துள்ளது. கடினமான மற்றும் துரதிர்ஷ்டவசமான யதார்த்தம் என்னவென்றால், பல முன்னணி வாடிக்கையாளர் ஆதரவு இல்லாததால், ஊழியர்களுக்கு போதுமான வேலை இல்லை" என்று உபெரின் பீனிக்ஸ் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் தலைவர் ருபின் சாவேலியோ ஊழியர்களிடம் கூறினார்.
எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல், ஒரே நாளில் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவது சரியான நடவடிக்கை அல்ல என்றும், வீட்டுக்கு அனுப்பப்படும் ஊழியர்களுக்கு ஓரளவுக்கு இழப்பு தொகையும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
"எங்கள் சவாரி பயணங்களின் அளவு கணிசமாகக் குறைந்து வருவதால், தகவல்தொடர்பு நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட ஆதரவின் தேவை கணிசமாகக் குறைந்துவிட்டது. மேலும் எங்கள் நிறுவனத்தில் பணியாளர்களுக்கு போதுமான வேலை இல்லை" என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தாரா கோஸ்ரோஷாஹி ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்.