Atal Pension Scheme: தினமும் ரூ.7 சேமித்து 60,000 ஓய்வூதியம் பெறலாம்; வரி விலக்கும் உண்டு

Atal Pension Scheme: முதுமையை காலத்தில் எவரையும் சாராமல் நிம்மதியாக வழ்க்கையை கழிக்க விரும்புபவர்களுக்கு, இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 13, 2022, 06:54 AM IST
  • அடல் பென்ஷன் யோஜனா 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இந்த திட்டம் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் மக்களுக்காக தொடங்கப்பட்டது,
  • இப்போது 18 முதல் 40 வயதுடைய எந்த இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
Atal Pension Scheme: தினமும் ரூ.7 சேமித்து 60,000 ஓய்வூதியம் பெறலாம்; வரி விலக்கும் உண்டு title=

Atal Pension Scheme: முதுமை காலத்தில் யாரையும் சாராமல் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். அவர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம் தான் அடல் பெண்ஷன் திட்டன். இதன் நீங்கள் திட்டமிட்டு சேமித்து, மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம். இந்தத் திட்டம்- அடல் பென்ஷன் யோஜனா (APY). இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அடல் பென்ஷன் யோஜனா

அடல் பென்ஷன் யோஜனா 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முன்னதாக இந்த திட்டம் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் மக்களுக்காக தொடங்கப்பட்டது, ஆனால் இப்போது 18 முதல் 40 வயதுடைய எந்த இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இத்திட்டத்தில், டெபாசிட் செய்பவர்களுக்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.1,000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000 மற்றும் அதிகபட்சம் ரூ.5,000 பெறலாம். இது மிக மிக பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். நீங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இதில் பதிவு செய்யலாம். இதற்கு சேமிப்பு கணக்கு, ஆதார் எண் மற்றும் மொபைல் எண் தேவை.

இந்த திட்டத்தின் பலன்கள்

அரசின் இந்த அற்புதமான திட்டத்தில் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக பலன் கிடைக்கும். ஒரு நபர் 18 வயதில் அடல் பென்ஷன் யோஜனாவில் சேர்ந்தால், 60 வயதிற்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ. 5000 மாதாந்திர ஓய்வூதியத்திற்காக அவர் மாதம் ரூ.210 டெபாசிட் செய்தால் போதும். அதாவது தினசரி 7 ரூபாய் என்ற அளவில் தான் முதலீடு தேவை.

மாதம் 5,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்

இந்தத் திட்டத்தில் தினமும் ரூ.7 டெபாசிட் செய்தால் மாதம் ரூ.5000 ஓய்வூதியமாகப் பெறலாம். அதே சமயம் இதில் மாதந்தோறும் 42 ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். நீங்கள் 2000 ரூபாய் ஓய்வூதியம் பெற விரும்பினால், நீங்கள் 84 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வேண்டுமானால் மாதம் 126 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். மாதம் 4000 ரூபாய் ஓய்வூதியம் பெற விரும்பினால், ஒவ்வொரு மாதமும் 168 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் அலுவலகத்தின் சூப்பர் ஹிட் முதலீட்டு திட்டம்

வரி சலுகை

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் இதில் கிடைக்கும் வரிச் சலுகைதான். அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்பவர்கள் வருமான வரிச் சட்டம் 80C -யின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகையைப் பெறுகிறார்கள். இது தவிர, சில சமயங்களில் ரூ.50,000 வரை கூடுதல் வரிச் சலுகை கிடைக்கும். அதாவது, இந்தத் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சம் வரை விலக்கு கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு முதலீட்டாளர் 60 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டால், அவருடைய மனைவி/கணவன் இந்தத் திட்டத்தில் தொடர்ந்து பணத்தை டெபாசிட் செய்யலாம் மற்றும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறலாம். கணவரின் மரணத்திற்குப் பிறகு அந்த நபரின் மனைவி மொத்தத் தொகையை கோரலாம் என்ற ஆப்ஷனும் உள்ளது. மனைவியும் இறந்துவிட்டால், அவரது நாமினிக்கு மொத்தத் தொகை கிடைக்கும்.

மேலும் படிக்க | Credit Card கடன்களால் முழி பிதுங்குதா: தொகையை திருப்பிச்செலுத்த எளிய டிப்ஸ் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News