SIP: பரஸ்பர நிதிய முதலீடு... தினம் ரூ.100 போதும்... பணத்தை பன்மடங்காக்கலாம்..!!

SIP - Mutual Fund Investment Tips: இந்தியாவில் பெரும்பாலானோர், பல வழக்கமான முதலீட்டுத் திட்டத்தை விட, பரஸ்பர நிதியம் என்னும் SIP திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், ஏனெனில் SIP மூலம் சிறிய அளவிலான தொகையை கூட முதலீடு செய்யலாம். மேலும், வருமானத்தையும் அள்ளிக் கொடுக்கின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 13, 2024, 06:29 AM IST
  • மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அபரிமிதமான வருமானத்தையும் தருகிறது.
  • தினசரி SIP முதலீட்டில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை எவ்வளவு?
  • கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேற தேவையானது சில திட்டமிடல் மட்டுமே.
SIP: பரஸ்பர நிதிய முதலீடு... தினம் ரூ.100 போதும்... பணத்தை பன்மடங்காக்கலாம்..!! title=

SIP - Mutual Fund Investment Tips: இந்தியாவில் பெரும்பாலானோர், பல வழக்கமான முதலீட்டுத் திட்டத்தை விட, பரஸ்பர நிதியம் என்னும் SIP திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், ஏனெனில் SIP மூலம் சிறிய அளவிலான தொகையை கூட முதலீடு செய்யலாம். மேலும், வருமானத்தையும் அள்ளிக் கொடுக்கின்றன. 

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அபரிமிதமான வருமானத்தையும் தருகிறது. கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேற 30 வயதிலேயே முதலீட்டை தொடங்க வேண்டும். கோடீஸ்வரராகும் கனவு நிறைவேற தேவையானது சில திட்டமிடல் மட்டுமே.  30 வயதான இளைஞர் 17 ஆண்டுகள் தொடர்ந்து சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தால், 47வது வயதில்  கோடீஸ்வரர் ஆகி விடலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியத்தில்  முதலீடு செய்பவரக்ளின் வசதிக்கேற்ப SIP முறையைதேர்ந்தெடுக்கும் விருப்பத்தை வழங்குகிறது. மியூச்சுவல் ஃபண்ட் சந்தாதாரர்கள் தினசரி, மாதாந்திர அல்லது காலாண்டு ஆகியவற்றின் அடிப்படையில்  SIP என்னும் பரஸ்பர நிதிய முதலீட்டு விருப்பங்களைப் பெறுகிறார்கள். தற்போது, ​​மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு மாதாந்திர முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) அதிகம் தேர்ந்தெடுக்கும் வழியாகும். ஆனால் தற்போது, தினசரி எஸ்ஐபி மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. 

தினசரி SIP திட்டத்தில், முதலீட்டாளர் SIP திட்டத்தை தொடங்க எந்த நாளையும் தேர்வு (Investment Tips) செய்யலாம். SIP விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்த நாளிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு தினசரி SIP பொதுவாக பதிவு செய்யப்படுகிறது.

தினசரி SIP முதலீட்டில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை என்ன?

ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய Paytm தளத்தைப் பயன்படுத்தினால், குறைந்தபட்ச தினசரி SIP தொகை ரூ 21 ஆகும். ஒரு நாளுக்கான அதிகபட்ச முதலீடு 1001 ரூபாய். குறைந்தபட்ச தினசரி SIP முதலீட்டுத் தொகை ரூ 100 கொண்ட பல ஃபண்ட் செயலிகள் மற்றும் இயங்குதளங்கள் உள்ளன.

மேலும் படிக்க | வட்டி வருமானத்தை அள்ளித் தரும் சில சிறு சேமிப்பு திட்டங்கள்..!!

தினசரி SIP முதலீட்டு திட்டத்தின் குறைந்தபட்ச கால அளவு என்ன?

குறைந்தபட்ச தினசரி SIP காலம் ஒரு மாதம். இறுதித் தேதி குறிப்பிடப்படாவிட்டால், முதலீட்டாளரிடமிருந்து முதலீட்டை நிறுவத்துவதாக அறிவிப்பு வரும் வரை அல்லது SIP பதிவுப் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் எது முந்தையதோ அதுவரை மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடு தொடரும்.

தினசரி SIP பதிவு செய்வதற்கான செயல்முறை என்ன?

தினசரி  பரஸ்பர நிதிய SIP பதிவை முடிப்பதற்கான செயல்முறை மாதாந்திர அல்லது காலாண்டு SIP பதிவுக்கு சமம். முதலீட்டாளர்கள் NACH படிவத்தை SIP பதிவுப் படிவத்துடன் பூர்த்தி செய்து, மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகம் அல்லது ஏதேனும் அதிகாரப்பூர்வ ஏற்றுக்கொள்ளும் மையம் அல்லது பதிவாளர் CAMS/Karvy -யிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தினசரி SIP முதலீட்டை ஆன்லைனில் தொடக்க முடியுமா?

ஆம், ஆன்லைன் பதிவு உட்பட தேவையான நடைமுறைகளை முடித்த பிறகு, முதலீட்டாளர்கள் தினசரி SIP முதலீடுகளை தொடக்க பரஸ்பர நிதி நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. தினசரி SIP திட்டத்தை தொடக்க, முதலீட்டாளர் SIP பதிவுப் படிவத்துடன் திட்ட விண்ணப்பப் படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். முதல் முறையாக முதலீட்டாளர்கள் தினசரி SIP பதிவுக்காக CKYC படிவத்துடன் பான் மற்றும் ஆதாரை சமர்ப்பிக்க வேண்டும்.

(முக்கிய குறிப்பு - பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.)

மேலும் படிக்க | SBI சர்வோத்தம் FD முதலீட்டில்... 7.9% கூட்டு வட்டி கிடைக்கும்... மிஸ் பண்ணாதீங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News