மெட்ரோவில் கட்டி பிடித்துகொண்ட காதல் ஜோடிக்கு சரமாரி அடி!

மெட்ரோ ரயிலில் கட்டிப் படித்துக்கொண்டு பயணித்த காதல் ஜோடிகளை சக பயணிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர்!

Updated: May 2, 2018, 07:34 AM IST
மெட்ரோவில் கட்டி பிடித்துகொண்ட காதல் ஜோடிக்கு சரமாரி அடி!
Pic Courtesy: twitter/@ANI

கொல்கத்தா: மெட்ரோ ரயிலில் கட்டிப் படித்துக்கொண்டு பயணித்த காதல் ஜோடிகளை சக பயணிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர்!

கொல்காத்தாவின் டும் டும் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், இளம் ஜோடியினரை அந்த ரயிலில் பயணித்த முதியவர்கள் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் கூடியிருந்த இளைஞர்கள் முதியவருக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர்.

முதலில் வாக்குவாதமாக ஆரம்பித்துள்ள இச்சம்பவம் பின்னர் அடிதடியாக மாறியுள்ளது. ரயிலில் பயணித்த கூட்டத்திடம் இருந்து தனது துணையாளரை காக்க சம்பந்தப்பட்ட பெண் போராடியும் பலனளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.