ராசிபலன்: இன்று காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம்!

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்...

Last Updated : Feb 14, 2020, 07:54 AM IST
ராசிபலன்: இன்று காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம்! title=

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்...

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான செயல்களில் ஈடுபடுவீர்கள் ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள் அண்டை அயலாரின் அன்புத்தொல்லை குறையும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள் உத்தியோகத்தில் ஆதரவு கிடைக்கும் கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள் தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும் பால்ய நண்பர்கள் உதவுவார்கள் யோகா தியானம் என மனம் செல்லும் வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள் உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும் அரசால் ஆதாயம் உண்டு வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம்  பெறுவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும் புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள்.வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும் உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மனம் அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள் உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது பொறுமைத் தேவைப்படும் நாள்.

கன்னி: கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள் வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராடவேண்டியிருக்கும் அலைச்சல் நிறைந்த நாள்.

துலாம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள் உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள் வியாபார ரீதியாக சில முக்கிய ஸ்தர்களை சந்திப்பீர்கள் உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் புகழ்கூடும் நாள்.

விருச்சிகம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டுவிட்டு அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவீர்கள் முக்கிய  முடிவுகளை எடுப்பீர்கள் பிள்ளைகளின் தேவைகளைபூர்த்தி செய்வீர்கள் வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்  அலுவலகத்தில் மரியாதை கூடும் சாதிக்கும் நாள்

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு கோபம் யாவும் நீங்கும் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும் எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும் உறவினர்கள் வீடுதேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும் புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது நயமாகப் பேசுபவர்களை நம்பவேண்டாம் வியாபாரத்தில் பழைய சரக்கு களை விற்க போராட வேண்டியிருக்கும் உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்

கும்பம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும் சகோதர வழியில் நன்மை உண்டாகும் மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும் அரசால் அனுகூலம் உண்டு வழக்கில் தீர்ப்புகள் சாதகமாக வரும் பிரபலங்களின்  நட்பு கிடைக்கும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள் திடீர் யோகம் கிட்டும் நாள்

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது. 

Trending News