உங்களுக்கு பூனை புடிக்குமா? -அப்போ முதலில் இதை படிங்க!

பார்ப்பதற்கு அழகான பூனையை பற்றிய சுவரஷ்யமாம தகவல்கள் தெரியுமா?..!

Last Updated : Jun 3, 2018, 08:07 PM IST
உங்களுக்கு பூனை புடிக்குமா? -அப்போ முதலில் இதை படிங்க!  title=

பார்ப்பதற்கு அழகான பூனையை பற்றிய சுவரஷ்யமாம தகவல்கள் தெரியுமா?..!

பூனை ஒரு அற்புதமான செல்ல பிராணி என்று நினைத்து அதை கொஞ்சும் நபரா நீங்கள். பூனை பற்றிய அபாய எச்சரிக்கைகள் இப்போது வெளியே வந்து விட்டது. பூனையிடம் மூளையை கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணி இருக்கிறது என்று எங்களுக்கு தெரியுமா?. அந்த ஒட்டுண்ணி 99.9 சதவீதம், பூனையில் இருந்து தான் மனிதர்களுக்கு தொற்றுகிறது. அப்படி தொற்றும் ஒட்டுண்ணி தான் மூளையை முழுமையாக கட்டுப்படுத்தி, ஏகப்பட்ட மூளை கோளாறுகளுக்கு காரணமாகிறது. இது வெறும் வதந்தி என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உண்மை. 

பூனை சுலபமாக பொறி வைக்காமலேயே சிக்கிக்கொள்கிறதே அது போன்றுதான் அந்த ஒட்டுன்னியும். இந்த ஒட்டுண்ணியானது எலியிலிருந்துதான் தான் பிறக்க ஆரம்பிக்கிறது. எலி பிறக்கும் மூன்று மாதத்துக்கு உள்ளேயே ஒரு பாரசைட் என்னும் ஒட்டுண்ணி அதன் மூளையில் உருவாகி விடுகிறது. இந்த ஒட்டுண்ணி, மூளையை அப்போதில் இருந்தே அதற்க்கு ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்த ஒட்டுண்ணி பெயர் டெக்சோபிளாஸ்மா கோண்டீ. எதை செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது, எங்கே போகலாம், போகக்கூடாது என்பது முதல் பைத்தியமான காரியங்களை செய்வது வரை அவ்வளவையும் இந்த ஒட்டுண்ணி தான் முடிவு செய்கிறது. 

எலிக்கு அதென்னவோ பூனையின் சிறுநீர் என்றால் பிடிக்கும். உண்மையில் இந்த ஒட்டுண்ணி வேலைதான் அது. எலிக்கு பிடிக்காமலேயே இந்த பழக்கத்தை ஏற்படுத்தியது அந்த ஒட்டுண்ணி. 

எலியை கடித்து சாப்பிட்ட பூனை வீட்டுப்பூனையாக இருக்கலாம். எலியை பிடிப்பதில் பாகுபாடு இல்லை. எலியை சாப்பிடுவதிலும் வேறுபாடு இல்லை. அப்படியே தூங்கி  எழுந்த பின் டூ பாத்ரூம் போவதிலும் அவ்வளவு ஒற்றுமை. 

எலியை தின்றதால் அதன் மூளையில் உள்ள ஒட்டுண்ணி, பூனை மூளைக்கு போய் விடுகிறது. அது போகும் டூ பாத்ரூம் மூலம் ஒட்டுண்ணி, மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம். வீட்டுப்பூனையாக இருந்தாலும், வெளிப்பூனையாக இருந்தாலும், இப்படி டூ பாத்ரூம் மூலம் மற்ற பூனைகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பரவி விடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

அமெரிக்காவில் உள்ள பெர்க்லே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக நிபுணர் வெண்டி இங்க்ராம் தலைமையிலான குழு இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகளை செய்து பல திடுக்கிடும் தகவல்களை சேகரித்துள்ளது. 

ஆராய்ச்சி முடிவுகளின் படி தெரியவந்த தகவல்கள்:

> டெக்சோபிளாஸ்மா கோண்டீ என்ற பாரசைட் தான் மனித மற்றும் உயிரினங்களின் மூளையை எல்லாவகையிலும் கட்டுப்படுத்துகிறது.

> இது ஒரு வகை ஒட்டுண்ணி. பிறக்கும் போதோ, மனிதன் மற்றும் சில உயிரினங்களுக்கு தொற்றுவதன் மூலமோ மூளையை அடைகிறது. 

> பூனை, எலி போன்ற உயிரினங்களுக்கு அதன் பழக்க வழக்கங்கள், அணுகுமுறை போன்றவற்றில் மாற்றங்களை இந்த ஒட்டுண்ணி செய்கிறது. 

> எந்த சமயத்தில் இந்த ஒட்டுண்ணி செயல்படும் என்று கூறுவது இயலாத காரியம். மூளையை கட்டுப்படுத்துவதில் வல்லமை படைத்தது. 

> மனிதர்களை பொறுத்தவரை, மூளையை சீர்படுத்துவதை தவிர, மற்ற அபாய மாற்றங்களை செய்வது இந்த ஒட்டுண்ணி தான். 

> சிஸ்ரோபெர்னியா, பைபோலார் கோளாறு, அப்சசிவ் கம்பல்சிவ் சிண்ட்ரோம் போன்ற மூளைகோளாறுக்கு காரணமே இந்த ஒட்டுண்ணி தான். 

> பார்ப்பதற்கு சாதாரண மனிதராக தான் வளர்வர்;  ஆனால் போகப்போக பழக்க வழக்கம் மாறும். அதற்கு இந்த ஒட்டுண்ணியே காரணம். 

> இந்த பழக்க வழக்கம் மாறுவது முதல் பல வகை மன, மூளை கோளாறு வருவது வரை இந்த ஒட்டுண்ணி வேலை தான்.

> பூனை மூலம் பரவும் இந்த ஒட்டுண்ணி, மீன், பறவைகளுக்கும் கூட பரவும் ஆபத்து உண்டு. 

> கொக்கு வாயில் தெரிந்தே சிக்கும் மீன்.  அப்படி மீன் நடந்து கொள்ள முதன் மூளையை ஆட்டிப்படைப்பதும் இந்த ஒட்டுண்ணியே. 

> மனிதர்களை பொறுத்தவரை குழந்தை பருவத்தில் தொற்றவே வாய்ப்பு அதிகம். எப்போது வேண்டுமானாலும் அது செயல்பட ஆரம்பிக்கும். 

> பெண்களுக்கு அதிக அளவில் குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு ஒட்டுண்ணி தொற்ற வாய்ப்பு அதிகம். 

> பூனை  முதல் மனிதன் வரை மூளையில் தொற்றும் ஒட்டுண்ணி, முதலில் செய்வது மூளையை பலமிழக்க வைப்பதுதான். 

> அடுத்து, தன் வசப்படுத்தி, மூளையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதும் இந்த ஒட்டுண்ணி வேலை தான் -இவ்வாறு ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Trending News