Karnataka SSLC Result 2022; அண்டை மாநிலமான கர்நாடகாவில் SSLC 2022 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மே இரண்டாவது வாரங்களில் தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதமானது. இப்போது, மே மூன்றாவது வாரமான அதாவது மே 16 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு வெளியாகும் என கூறப்படுகிறது.
எந்த தேதியில் வெளியாகும் என்ற சரியான தேதி இன்னும் உறுதியாக அறிவிக்கப்படாவிட்டாலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ், மே மூன்றாவது வாரத்தில் கர்நாடக மாநில பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என உறுதிபடுத்தியுள்ளார். கர்நாடகா மாநில SSLC முடிவுகள் 2022-ஐ, karresults.nic.in என்ற இணைய தளம் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் பெறுவது எப்படி.?
இது தவிர, முடிவுகள் KSEEB-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sslc.karnataka.gov.in மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படுடள்ளன. ஆன்லைன் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை, அதிகாரப்பூர்வ கர்நாடக SSLC தளங்களைத் தவிர, DiPR கர்நாடக இணையதளத்திலும் முடிவுகள் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சரியான தேதி மற்றும் நேரத்தை எதிர்நோக்கி மாணவர்கள் காத்திருக்கின்றனர். வழக்கமாக காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக பிற்பகலில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு சுமார் 8 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். பொதுத்தேர்வு தேதி மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் நாள் குறித்த அறிவிப்புகளை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடுகிறது.
மேலும் படிக்க | இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 1044 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR