NEET 2020 : முடிவுகள் விரைவில்.. கட் ஆஃப் மார்க் என்னவாக இருக்கும்..!!!

NEET தேர்வு 2020 முடிவடைந்த நிலையில், நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) விரைவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2020, 05:46 PM IST
  • NEET தேர்வு 2020 முடிவடைந்த நிலையில், நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) விரைவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது.
  • NTA முதலில் பதில்களை வெளியிடும். இந்த மாத இறுதிக்குள் பதில்கள் வெளியிடப்படும்.
  • ntaneet.nic.in என்ற வலைதளத்திற்கு சென்று உங்கள் பதில்களை நீங்கள் சரிபார்க்கலாம்.
NEET 2020 : முடிவுகள் விரைவில்.. கட் ஆஃப் மார்க் என்னவாக இருக்கும்..!!! title=

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வுகள் செப்டம்பர் 13 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது.

தற்சமயம் அனைத்து மாணவர்களும் தேர்வு முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

NEET தேர்வு 2020 முடிவடைந்த நிலையில், நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) விரைவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது.

NTA  முதலில் பதில்களை வெளியிடும்.  இந்த மாத இறுதிக்குள் பதில்கள் வெளியிடப்படும். ntaneet.nic.in என்ற வலைதளத்திற்கு சென்று உங்கள் பதில்களை நீங்கள் சரிபார்க்கலாம்.

 

கடந்த ஆண்டு, நீட் தேர்வு முடிவுகள் தேர்வு முடிந்த ஒரு மாதத்திற்குள் வெளியிடப்பட்டது. இந்த முறையும், விரைவில் முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் நாடு முழுவதும் பரவி வருவதால், கல்வி ஆண்டு ஏற்கனவே தாமதமாகிவிட்டது, எனவே முடிவுகளை விரைவில் வெளியிடுவதன் மூலம் மாணவர் சேர்க்கை செயல்முறையைத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

கட் ஆஃப் மார்க்  எவ்வளவாக இருக்கும்?

இந்த முறை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு  கட்-ஆப்  மார்க் குறித்து அதிக பதற்றம் நிலவுகிறது. இவர்களுக்கு உதவ தோராயமான கட்-ஆஃப்  இருக்கலாம் என்பதௌ அனுமானித்து வழங்கியுள்ளோம். மதிப்பெண் இதற்கு சிறிது முன் பின் இருக்கலாம்

கட் ஆஃப் மார்க்  எவ்வளவாக இருக்கும்?

முன்பதிவு செய்யப்படாத / பொது பிரிவிற்கான  குறைந்தபட்ச மதிப்பெண் அல்லது கட்-ஆஃப் மதிப்பெண்: 710-140

எஸ்சி / எஸ்டி / ஓபிசி பிஹெச் (SC / ST / OBC PH): 110 - 100

பின்வரும் நிறுவனங்களில் சேருவதற்கான NEET கட்-ஆஃப் மார்க் தேவை

  • அரசு கல்லூரிகளில் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) இடங்கள் 
  • மாநில அரசு கல்லூரிகளில் 85 சதவீத மாநில ஒதுக்கீடுகளுக்கான இடங்கள்.
  • 15 எய்ம்ஸ்(AIIMS)  மற்றும் இரண்டு ஜிப்மர் ( JIPMER) நிறுவனங்கள்

குறிப்பாக, கட்-ஆஃப்  மதிப்பெண் என்பது தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச தகுதி சதவீதம் மற்றும் மதிப்பெண் ஆகும்.

மேலும் படிக்க | மேலும் படிக்க | Corona Vaccine: இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்..!!!
 

Trending News