பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது - யுஜிசி

பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைத்தூரக் கல்வி படிப்புகள் செல்லாது என யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 31, 2022, 04:10 PM IST
  • பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகள் செல்லாது
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அதிரடி அறிவிப்பு
  • ஆளுநர் மற்றும் உயர்கல்வித்துறை விசாரணை நடத்த உத்தரவு
பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது - யுஜிசி title=

சேலம் மாவட்டம் கருப்பூரில் 1997 ஆம் ஆண்டு முதல் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 2001 ஆம் ஆண்டு அந்த பல்கலைக்கழகத்தில் 96 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்பட்ட தொலைதூரக்கல்வி, தற்போது 156 பாடத்திட்டங்கள் உள்ளன. 12 கல்வி நிலையங்களில் தொழில்சார் பாடப்பிரிவுகளும் உள்ளன. இந்தப் பாடப்பிரிவுகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யுஜிசி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க  UGC NET 2022: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள், இந்த நேரடி இணைப்பில் விண்ணப்பிக்கலாம்

இது தொடர்பாக ஆளுநர் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ள யுஜிசி, முன் அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழகம் ஆன்லைன் படிப்புகள் நடத்துவது குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. போதிய ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர் இல்லை எனத் தெரிவித்துள்ள யுஜிசி, பல்கலைக்கழக மானிய அனுமதி பெறாமல் தொலைத்தூரக் கல்வித்திட்டம் மற்றும் ஆன்லைன் வழி கல்வி திட்டங்களை நடத்தி வருவதாக கூறியுள்ளது. 

ஏற்கனவே பெற்ற அனுமதி 2020 ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டதால் மாணவர்கள் அந்த பல்கலைக்கழக படிப்புகளில் சேர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொலைத்தூரக் கல்வியில் பெற்ற பட்டங்களும் செல்லாது என்பது இப்போது தெரியவந்துள்ளது. மேலும், கல்வி ஆண்டு அனுமதி கேட்டு பல்கலைக்கழகம் விண்ணப்பித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது எனக் கூறியுள்ள யுஜிசி, அடுத்த 2 கல்வி ஆண்டுகளுக்கு தொலைத்தூரக் கல்வித்திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | TNSDC கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News