UGC NET 2022: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள், இந்த நேரடி இணைப்பில் விண்ணப்பிக்கலாம்

UGC NET Last Date: தேசிய தேர்வு முகமை எண்டிஏ, யுஜிசி என்இடி 2022 தேர்வுக்கான பதிவு சாளரத்தை இன்று, அதாவது மே 30 அன்று மூடிவிடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 30, 2022, 01:43 PM IST
  • யுஜிசி என்இடி 2022 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
  • https://ugcnet.nta.nic.in/ என்ற இந்த நேரடி இணைப்பில் சென்று விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் படிவத்தில் திருத்தம் செய்ய மே 31 முதல் ஜூன் 1 இரவு 9:00 மணி வரை அவகாசம் வழங்கப்படும்.
UGC NET 2022: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள், இந்த நேரடி இணைப்பில் விண்ணப்பிக்கலாம் title=

UGC NET 2022 பதிவுக்கான கடைசி தேதி: யுஜிசி என்இடி 2022 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தேசிய தேர்வு முகமை எண்டிஏ, யுஜிசி என்இடி 2022 தேர்வுக்கான பதிவு சாளரத்தை இன்று, அதாவது மே 30 அன்று மூடிவிடும். இந்த தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்காதவர்கள், யுஜிசி என்இடி- இன் அதிகாரப்பூர்வ இணையதளமான ugcnet.nta.nic.in க்கு சென்று உடனடியாக விண்ணப்பிக்கலாம். 

இந்த முறை யுஜிசி என்இடி டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 தேர்வுகள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டு தேர்வுகளும் ஒன்றாக நடைபெறும். 

யுஜிசி என்இடி 2022 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி முதலில் மே 20 ஆக இருந்தது. எனினும், தேர்வு எழுதுபவர்களின் கோரிக்கைக்குப் பிறகு, அதன் கடைசி தேதி மே 30 வரை நீட்டிக்கப்பட்டது. 

விண்ணப்ப செயல்முறை முடிந்ததும், யுஜிசி என்இடி விண்ணப்பப் படிவத்தில் திருத்தம் செய்ய ஒரு திருத்தச் சாளரம் திறக்கும். தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் படிவத்தில் திருத்தம் செய்ய மே 31 முதல் ஜூன் 1 இரவு 9:00 மணி வரை அவகாசம் வழங்கப்படும். 

படிவத்தில் திருத்தம் செய்ய, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://ugcnet.nta.nic.in-க்கு செல்ல வேண்டும். தங்கள் பதிவு ஐடியின் உதவியுடன் படிவத்தில் திருத்தங்களைச் செய்யலாம். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் அதை கண்டிப்பாக பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் நீங்கள் எங்கே தவறு செய்துள்ளீர்கள் என்பதையும், படிவத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதையும் எளிதாக கண்டறியலாம். 

மேலும் படிக்க | தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 

https://ugcnet.nta.nic.in/ என்ற இந்த நேரடி இணைப்பில் சென்று விண்ணப்பிக்கலாம்.

யுஜிசி என்இடி 2022 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி

1. விண்ணப்பப் படிவத்தை நிரப்ப, யுஜிசி என்இடி-இன் அதிகாரப்பூர்வ தளமான ugcnet.nta.nic.in -க்கு செல்லவும். 

2. முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள யுஜிசி என்இடி 2022 தேர்வு பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும். அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பிற்குச் செல்லவும்.

3. படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

4. பின்னர் உறுதிப்படுத்தல் பக்கம் (கன்ஃபர்மேஷன் பேஜ்) வரும். அதைப் பதிவிறக்கம் செய்து, எதிர்காலத் தேவைக்காக உங்களிடம் ஹார்ட் காப்பியாக வைத்திருக்கவும்.

மேலும் படிக்க | பி.எஸ்சி முடித்தவர்களுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News