இந்திய மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்புக்கு செல்ல விரும்பும் காரணம் என்ன?

நீண்ட காலமாக சிக்கலில் இருக்கும் உக்ரைனில்  மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 27, 2022, 04:00 PM IST
  • வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
  • உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பும் இந்திய மாணவர்களும்
  • உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள்
இந்திய மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்புக்கு செல்ல விரும்பும் காரணம் என்ன? title=

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் எதிரொலியால், யுத்த பூமியாய் உருமாறியிருக்கும் உக்ரைனில் படிக்கும்  ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் நிலைமை கவலையளிக்கிறது.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பயமும், அச்சமும் எப்போது தீரும்?

போரினால் படிப்பு தடைபட்ட நிலையில், அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை வெளியேற்றும் இந்திய அரசின் முயற்சியும் தடைபட்டுள்ளது.

உக்ரைன் தனது வான்வெளியில் சிவிலியன்கள் விமான பறப்புக்கு தடை செய்ததால், இந்தியர்களை வெளியேற்றுவதற்கான இந்தியாவின் முயற்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் பல இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். நீண்ட காலமாக சிக்கலில் இருக்கும் நாட்டில் மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்? தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | ஏன் தமிழகம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்கிறது?

இந்திய மாணவர்களின் எண்ணிக்கை:
உக்ரைனின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகத்தின்படி, நாட்டில் சுமார் 18,095 இந்திய மாணவர்கள் படிக்கின்றானர். 2020 ஆம் ஆண்டில், உக்ரைனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 24 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

தரமான மருத்துவக் கல்வி
மருத்துவத் துறையில் அதிக எண்ணிக்கையிலான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் அதிக நிபுணத்துவம் பெற்ற உக்ரைன், மருத்துவக் கல்வியின் தரத்தில் ஐரோப்பாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

உக்ரைனின் அரசு நடத்தும் சில  பல்கலைக்கழகங்கள் உயர்தரக் கல்வியை வழங்குவதற்கு பிரபலமானவை. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள்,  இந்தியாவில் அதிகம் அறியப்படாத தனியார் மருத்துவக் கல்லூரிக்கு செய்யும் செலவில் ஒரு பகுதியை செலுத்தினாலே, உக்ரைனில் தரமான மருத்துவக் கல்வியைப் பெறலாம் என்பதால், உக்ரைனுக்கு இந்திய மாணவர்கள் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  

மேலும் படிக்க | கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு! கலந்தாய்வு எப்போது?

இந்தியாவை விட கட்டணம் குறைவு

இந்தியாவில் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத அல்லது இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை கொடுக்க முடியாத மாணவர்களுக்குக் கிடைத்த வரம் என்றே உக்ரைன் நாட்டைச் சொல்லலாம்..

உக்ரைனில் ஆறு ஆண்டு மருத்துவப் பட்டப்படிப்புக்கு17 லட்சம் ரூபாய் செலவாகும், இது இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடும்போது, குறைவான கட்டணம் ஆகும். மேலும் குறைவான மதிப்பெண் வாங்கியவர்களுக்கும் உக்ரைனில் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைப்பது சுலபம். 

இந்தியாவில் பயிற்சி செய்ய உரிமம்

உக்ரைனில் படிக்கும் மாணவர்கள் வெளிநாட்டு MBBS பட்டங்களுடன் இந்தியாவுக்குத் திரும்பும்போது, ​​அவர்கள் இந்தியாவில் மருத்துவப் பயிற்சி செய்வதற்கான உரிமத்தைப் பெற தேசிய தேர்வு வாரியத்தின் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வை (FMGE) எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சியான செய்தி - கல்வி இயக்குனர் அறிவிப்பு

உக்ரைனில் இருந்து மருத்துவப் பட்டம் பெற்ற ஏறக்குறைய 4,000 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் FMGE ஐப் படிக்கிறார்கள், ஆனால் 700 பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள்.

இருப்பினும், குறைந்த தேர்ச்சி விகிதம் மாணவர்களை உக்ரேனிய பல்கலைக்கழகங்களில் சேர்வதைத் தடுப்பதில்லை

உக்ரைனில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு இல்லை, மேலும் கல்வியும் ஆங்கிலத்தில் மட்டுமே கற்றுக் கொடுக்கப்படுகிறது.  

மேலும் படிக்க | நீட் தேர்வில் இருந்து விலக்கு விவகாரம்!

இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைனை தேர்வு செய்வதற்கான மற்றொரு காரணம், இந்தியாவில் இருப்பது போல, நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் எதுவுமே கிடையாது. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

உக்ரைனில் மருத்துவ படிப்புக்கான காலியிடங்கள் அதிகம் இருப்பது இந்திய மாணவர்களின் மருத்துவக் கனவை பூர்த்தி செய்ய உதவுகிறது.
 
ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகளில் மருத்துவப் படிப்புக்கு சேர்ந்தால், அங்கு அந்த நாட்டின் உள்ளூர் மொழிகளை கற்றுக் கொள்வது அவசியமாகிறது. ஆனால், உக்ரைனில், மருத்துவப் படிப்பு, ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகிறது என்பதால் இந்திய மாணவர்களின் முதல் தேர்வு உக்ரைனாக இருக்கிறது.  

மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News