கர்நாடகாவில் வாழும் லிங்காயத் பிரிவினர் தங்களை வீர சைவர்கள் என்றுக் கூறிக்கொண்டு தனி வழிப்பாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர். பசவர் என்பவர் லிங்காயத் பிரிவை தோற்றுவித்தார். எங்களை புத்த, சீக்கிய மதங்களை போல் லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் வேண்டும் என நீண்ட காலமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் மற்றும் பாஜ கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை வலுத்துள்ளது.
கடந்த ஒரு மாதா காலமாக லிங்காயத் சமுதாயத்தினர் கர்நாடக அரசுடன் பேச்சுவாரத்தை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, லிங்காயத் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான தனி மதம் கோரிக்கைக்கு காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த ஒப்புதலை கர்நாடகா அமைச்சரவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு லிங்காயத் சமுதாயத்தினரின் கோரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது இந்து மதத்தினரில் பிரிவினையை உண்டாக்கும் என்றும், மேலும் பலர் இதுபோன்ற கோரிக்கைகள் வைக்கக்கூடும் எனவும் குற்றம்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.