குட்கா வழக்கு: எப்படி நேர்மையாக விசாரணை நடைபெறும் ஸ்டாலின் கேள்வி

குட்கா வழக்கு குறித்து தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 31, 2018, 07:42 AM IST
குட்கா வழக்கு: எப்படி நேர்மையாக விசாரணை நடைபெறும் ஸ்டாலின் கேள்வி title=

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. 

இந்நிலையில், கடந்த மாதம் 26-ஆம் தேதி குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையினை ஏற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடையாளம் தெரியாத மத்திய, மாநில அரசு அதிகாரிகள், தனி நபர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் சிபிஐ விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பதவி நீக்கம் செய்யாமல், விசாரணை எப்படி நேர்மையாக நடைபெறும் என கேள்வி எழுப்பி உள்ளார். இதுக்குறித்து அவர் தனது சமூக வலைதளங்களில் கூறியதாவது:-

"குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதால் சுதந்திரமான விசாரணை நடைபெற அமைச்சர் விஜயபாஸ்கரும், டிஜிபி டி.கே.ராஜேந்திரனும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். குட்கா மாமுல் டைரியில் இடம் பெற்றுள்ளவர்கள் பதவி எப்படி நேர்மையான விசாரணையை நடத்த அனுமதிப்பார்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

 

Trending News