உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் வாழும் தெய்வமாக விளங்கும் தாயாரை வணங்கி போற்றுவது அனைவரின் கடமை ஆகும்.
அம்மா என்ற வார்த்தைக்கு இயற்கையை விட சக்தி அதிகம். அதனால் தான் அம்மாவைப் பற்றி எழுத யாரும் உள்ள உணர்ச்சிகளை எழுத்தாக்க வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடுகின்றோம்.
அப்படி பட்ட திருநாளாக உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அன்னையர் தினத்தையொட்டி துணை முதல்வர் ஓபிஎஸ் ட்விட்டரில் வாழ்த்து கூறுகையில்..!
தன்னலம் பாராது மற்றவர்களுக்காகவே வாழ்பவள் தாய். இத்தூய தாயுள்ளத்திற்கு உலகில் ஈடு இணை ஏதுமில்லை. இதனாலேயே மாதா,பிதா,குரு,தெய்வம் என தாயை முதலிடத்தில் வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். இப்படி தன்னை மெழுகாக்கி, பிறருக்காக வாழும் தியாகியர் அன்னையரை எந்நாளும் போற்றுவோம் என்றார்.
தன்னலம் பாராது மற்றவர்களுக்காகவே வாழ்பவள் தாய். இத்தூய தாயுள்ளத்திற்கு உலகில் ஈடு இணை ஏதுமில்லை. இதனாலேயே மாதா,பிதா,குரு,தெய்வம் என தாயை முதலிடத்தில் வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். இப்படி தன்னை மெழுகாக்கி, பிறருக்காக வாழும் தியாகியர் அன்னையரை எந்நாளும் போற்றுவோம்!#HappyMothersDay
— O Panneerselvam (@OfficeOfOPS) May 13, 2018
அதே போன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ இன்று அன்னையர் தினம். கடவுளே உன்னை மிகவும் வேண்டிக் கேட்கிறேன் என் அதே தாயை எனக்கு மீண்டும் கொடு.” எனத் பதிவிட்டுள்ளார்.
With former Amb to Pak, Mr Raghavan Lt Gen Hasnain at the Centre for Advanced Strategic Studies,Pune.
Seminar on National Security: Opportunities & Challenges.
Others:VA Anup Singh,Air Marshal Gokhale,Dr Karmakar &Dr Anant Bhagat.
A treat to listen to experts uninterrupted.. pic.twitter.com/V5oINGsbyR— Kiran Bedi (@thekiranbedi) May 13, 2018
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள பதிவில். “ அம்மாவின் அன்பைப் போல் வேறு ஒன்றும் இல்லை. இன்றைய அன்னையர் தினத்தில் நான் என் தாய் மற்றும் மற்ற அனைத்து தாய்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
T 2802 -
There’s nothing like the love of a mother. This mother’s day I thank my mother and all mothers who have given their little newborns, their love, warmth and a safe pair of hands to survive and thrive. #EveryChildALIVE pic.twitter.com/Ck4Qp6jd1F— Amitabh Bachchan (@SrBachchan) May 12, 2018