இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறை நமக்கு அளித்த பரிசுகளில் ஒன்று கொலஸ்ட்ரால். மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். மெழுகு போன்ற மஞ்சள் நிற பொருளான கொலஸ்ட்ரால் இதய நரம்புகளில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. சில சமயங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த, அது குறித்த சரியான புரிதல் அவசியம். பல கட்டுக் கதைகளும், தவறான புரிதல்களும் பலர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் மிகை இல்லை.
இதய சிகிச்சை நிபுணரான டாக்டர் இம்ரான் அகமது உடன் உரையாடுகையில், கொலஸ்ட்ரால் குறித்த தவறான புரிதல்களையும், குழப்பங்களையும் விளக்கும் வகையில், சில விளக்கங்களை அளித்தார். அதனை அறிந்து கொள்வதால், கொலஸ்ட்ரால் தொடர்பாக நமக்கு சரியான புரிதல் ஏற்படும்.
ஒல்லியான உடல்வாகக் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்காது
உடல் பருமன் இல்லாதவர்கள், ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள், கொலஸ்ட்ராலை அதிகம் எடுத்துக் கொள்வதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும், அவர்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் ஒரு தவறான புரிதல் உள்ளது. ஆனால் யாராக இருந்தாலும், அதிக கொலஸ்ட்ரால் என்பது ஆபத்து. ஏனென்றால், கொலஸ்ட்ரால் கொழுப்பு மற்றும் கால்சியம் போன்ற பிற பொருட்கள் உடன் கலந்து இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால் ஒல்லியாக இருந்தாலும், அளவிற்கு அதிகமாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை உட்கொண்டால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
நல்ல கொலஸ்ட்ரால் மட்டும் கெட்ட கொலஸ்ட்ரால் இடையிலான வேறுபாடு
கொலஸ்ட்ராலில் HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால், LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இரண்டும் அடங்கும். இதில் HDL கொலஸ்ட்ரால் அளவு தேவைக்கு அதிகமாக குறைவதும் ஆபத்து. உயர் அடர்த்தி கொழுப்பு புரதம் எனப்படும் HDL, கல்லீரல் செயல்பாடு உள்ளிட்ட உடலின் பல செயல்பாடுகளுக்கு அவசியமாகும். அதே சமயத்தில் குடல் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு பொருத்தம் என்னும் ஹெட்டியல் கொலஸ்ட்ரால், மாரடைப்பு மற்றும் பக்கவாத அபாயத்தை அதிகரிக்கும் ஆபத்தானது. எனவே உடலின் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகவும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | சிக்குன்குனியா குணமான பின்னும் விடாமல் தொடரும் மூட்டு வலி: காரணம் என்ன தெரியுமா?
உடலுக்கு தேவையான கொலஸ்ட்ரால் அளவு
உடலுக்கான கொலஸ்ட்ரால் தேவை என்பது, ஒவ்வொரு நபருக்கும் வேறு மாதிரியாக இருக்கும். அதிக அளவில் உடல் உழைப்பு அல்லது உடல் செயல்பாடு உள்ளவர்களுக்கு, கொலஸ்ட்ரால் தேவை, பிறரை ஒப்பிடும்போது சிறிதளவு அதிகமாக இருக்கலாம். எனவே, பொதுவாக உடல் நல பிரச்சனைகள் எதுவும் இல்லாதவர்கள், பிட்டாக இருப்பவர்கள், கொலஸ்ட்ராலை சிறிது அதிகமாக உட்கொள்வதால் பாதிப்பு இருக்காது. அதற்காக அதிக அளவில் எடுத்துக் கொள்வது சரியல்ல. சமயத்தில் உடல்நல பிரச்சனைகள் இருப்பவர்கள், குறிப்பாக இரத்த அழுத்தம் நீரழிவு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள், மிகக் குறைந்த அளவு கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. உங்கள் குடும்ப நல மருத்துவரின், ஆலோசனையை கேட்டு, அதற்கு ஏற்ப உங்கள் உணவு முறையை அமைத்துக் கொள்வது, சிறந்த வழிமுறையாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ