உலர் திராட்சையின் நன்மைகள்: உலர் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உலர் பழங்களை உட்கொள்கிறார்கள். இந்த உலர் பழங்களில் உலர் திராட்சையும் ஒன்று. உலர் திராட்சையை சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. பல வகையான ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்து உலர் திராட்சைகளில் உள்ளன. இதனுடன், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்களும் இதில் ஏராளமாக உள்ளன. ஆகையால் உலர் திராட்சை சாப்பிடுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் திராட்சையை அதிகமாக உட்கொண்டால் அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த பதிவில் உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், நாள் ஒன்றுக்கு எத்தனை உலர் திராட்சைகளை உட்கொள்ளலாம் என்பது பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
திராட்சையை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இதில் முதல் நன்மை என்னவென்றால், திராட்சையை சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்தத்திலிருந்து விடுபடலாம். திராட்சையை வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது உங்கள் உடலில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அளவை அதிகரிக்கும். இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
வாய் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்
இதனுடன், திராட்சை சாப்பிடுவதன் மூலம் நமது வாய் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றும். இதனுடன், திராட்சையும் சாப்பிடுவது நமது பற்களின் தூய்மை மற்றும் அமைப்பை மேம்படுத்துகிறது. ஊறவைத்த திராட்சையை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இரத்த பற்றாக்குறை இருக்காது
திராட்சையை உட்கொள்வது இரத்த சோகை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. ஹீமோகுளோபின் குறைபாடு இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் திராட்சையை சாப்பிடலாம். இதன் காரணமாக, இரத்த சிவப்பணுக்கள் மிக வேகமாக உருவாகின்றன. இது நமது உடலில் ஏற்படும் இரத்த பற்றாக்குறையை சரி செய்கிறது.
மேலும் படிக்க | அதிக ஆயுள் வேண்டுமா? ‘இந்த’ 5 உடற்பயிற்சிகளை செய்தால் போதும்!
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
திராட்சை தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இன்றைய காலகட்டத்தில் வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆகையால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் முக்கியம். திராட்சை நீர் வைரஸ் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதன் காரணமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன.
உடல் நச்சு நீங்கும்
உடலில் நச்சுப் பொருட்கள் அதிகமாகக் குவிந்தால், பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து உலர் திராட்சை தண்ணீர் குடிப்பவர்களின் உடலில் உள்ள நச்சுக்கள் அவ்வப்போது வெளியேறும். மேலும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உலர் திராட்சை நீர் உதவுகிறது.
ஒரு நாளில் எத்தனை திராட்சைகளை சாப்பிட வேண்டும்
ஒரு நாளைக்கு எத்தனை உலர் திராட்சைகளை உட்கொள்ளலாம் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. ஏனெனில் அதிக திராட்சை உட்கொண்டால் அதனால் பல வித பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். திராட்சையை அதிகமாக உட்கொண்டால், அது உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். ஒரு நாளில் ஊறவைத்த 8 முதல் 10 திராட்சைகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிக திராட்சை சாப்பிடுவது நம் உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | முட்டையை இந்த முறைகளில் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ