Director Shankar Velpari Novel Rights: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் கடும் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்த படத்தின் தொடர்ச்சியான இந்தியன் 3 திரைப்படத்தின் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியன் 3 எப்போது தயாராகி, ரிலீஸ் ஆகும் என படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
முதலில் இந்தியன் 2 திரைப்படத்தை மட்டுமே எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருந்தார். ஆனால், படக்காட்சிகள் அதிகமாக இருந்த காரணத்தால் அவை இரண்டு பாகங்களாக மாற்றியமைத்து வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியன் 3 திரைப்படம் ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் விட்டதை ஷங்கரும், கமலும் இந்தியன் 3 திரைப்படத்தில் பிடித்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படமாகும் வேள் பாரி நாவல்...
இந்தியன் 3 திரைப்படம் மட்டுமின்றி ராம் சரணை வைத்து பான் இந்தியன் அளவில் கேம் சேஞ்சர் திரைப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இதுவும் இறுதிக்கட்ட பணியில் இருக்கிறது. வரும் டிச. 20ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்திற்கு முன்னரே இந்தியன் 2 பட பணிகள் தொடங்கிய நிலையில், கொரோனா காலகட்டத்திற்கு பின் ராம் சரணை வைத்து இந்த படத்தை ஷங்கர் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க | பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருக்கும் பிரேம்ஜியின் மனைவி! வைரல் புகைப்படங்கள்…
இந்தியன் 3, கேம் சேஞ்சர் ஒருபுறம் இருக்க தமிழின் மிகவும் பிரபல சரித்திர நாவலாக அறியப்படும் மதுரை மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான சு. வெங்கடேசன் எழுதிய வீர யுக நாயகன் வேள் பாரி நாவலின் உரிமத்தை ஷங்கர் பெற்றுள்ளார். கைவசம் இருக்கும் திரைப்படங்களின் பணிகள் முடிந்த உடன் வேள் பாரி நாவலை அடிப்படையாக வைத்து திரைப்படமோ அல்லது வெப்-சீரிஸோ எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஷங்கர் ட்வீட்
இந்நிலையில், ஷங்கர் தரப்பில் இருந்து இன்று பரபரப்பான X தளப் பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. அதில்,"அனைவரின் கவனத்திற்கும்... சு. வெங்கடேசனின் தமிழ் நாவலான 'வீர யுக நாயகன் வேள் பாரி' திரைப்பட பதிப்புரிமை பெற்றவராக, பல திரைப்படங்களில் அனுமதியின்றி அந்த நாவலின் முக்கிய காட்சிகள் பயன்படுத்தப்படுவதைக் கண்டு கலங்குகிறேன்.
Attention to all ! As the copyright holder of Su. Venkatesan’s iconic Tamil novel "Veera Yuga Nayagan Vel Paari", I'm disturbed to see key scenes being ripped off & used without permission in many movies. Really upset to see important key scene from the novel in a recent movie…
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 22, 2024
சமீபத்திய திரைப்பட ட்ரெய்லர் ஒன்றில் நாவலின் முக்கியமான காட்சியை பார்த்ததில் மிகவும் வருத்தமாக இருந்தது. திரைப்படங்கள், வெப்-சீரிஸ்கள் உள்ளிட்டவையில் நாவலின் காட்சிகளைப் பயன்படுத்துவதை தயவுசெய்து தவிர்க்கவும். படைப்பாளிகளின் உரிமைகளை மதிக்கவும். காட்சிகளின் அங்கீகரிக்கப்படாத தழுவல்களை தவிர்க்கவும். மீறினால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கங்குவாவா அல்லது தேவாராவா?
எந்த படம் என பெயர் குறிப்பிடாத நிலையில், சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படத்தின் டிரைலரைதான் ஷங்கர் குறிப்பிடுகிறார் என நெட்டிசன்கள் தங்களின் கணிப்புகளை அள்ளிவீசி வருகின்றனர். வேறு ஒரு சிலரோ ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாக உள்ள தேவாரா திரைப்படத்தை குறிப்பிடுகிறார் எனவும் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், ஷங்கரின் இந்த ட்வீட் தமிழ் திரையுலகில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. வரும் செப். 27ஆம் தேதி தேவாரா திரைப்படமும், நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படமும் வெளியாக உள்ளன.
மேலும் படிக்க | ஹிட்லர் படத்தின் முன் வெளியீட்டு விழா! நடனமாடி அசத்திய விஜய் ஆண்டனி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ