வெற்றிலை போடுவதை, ‘தாம்பூலம் தரித்தல்’ எனக் கூறுவார்கள். இதனால், அளவற்ற ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளதால், தாம்பூலம் தரிப்பதை நமது முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். கொடி வகையைச் சேர்ந்த வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப்பலன்களைத் தரக்கூடியவை. இந்தியாவில் பொதுவாக அனைவருக்கும் வெற்றிலை பற்றி தெரிந்திருக்கும். இதன் சுவை சிலருக்கு மிகவும் பிடிக்கும். இந்து மதத்தில், வெற்றிலை மிகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது . வழிபாடு மற்றும் ஆன்மீக சடங்குகளில் வெற்றிலை தவறாமல் பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேதத்தில், வெற்றிலை மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இது அல்சர், நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. வெற்றிலையில் அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
https://zeenews.india.com/tamil/health/breakfast-food-for-diabetes-patie...
வெற்றிலை, உமிழ்நீரைப் பெருக்கும் தன்மை கொண்டது. இது பசியை உண்டாக்கும். பால் சுரக்க வைக்கும். நாடி நரம்புகளை வலுப்படுத்தும். இது இயற்கை தந்த அற்புதம் எனலாம். அளவோடு வெற்றிலை சாப்பிட்டுவந்தால், ஆண்மைக்குறைபாடு நீங்கும் என்கின்றர் சித்த மருத்துவர்கள்.
மேலும் படிக்க | தாம்பத்திய வாழ்க்கையை சீர்குலைக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு!
வெற்றிலையின் நன்மைகள்
1. ஒருவர் வயிறு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், வெற்றிலை அவருக்கு நன்மை பயக்கும். இதனை உட்கொள்வது வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம், செரிமானம், அல்சர் மற்றும் மலச்சிக்கல் தொடர்பான பல பிரச்சனைகள் நீங்கும். இதன் காரணமாக, உங்கள் செரிமான அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வயிற்று பிரச்சனைகள் நீங்கின்றன. அதனால் தான் சாப்பிட்ட பின் வெற்றிலை போடும் பழக்கத்தை நமது முன்னோர்கள் கடைபிடித்தனர்.
2. உடலில் கொழுப்பு அதிகரிப்பதால், எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. இன்றைய மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது. உடல் எடையை குறைக்க வெற்றிலை பலன் தரும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
மேலும் படிக்க | Garlic Side Effects: அளவிற்கு மிஞ்சிய பூண்டு கல்லீரலை பாதிக்கும்!
3. வெற்றிலை உடலில் குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது. உடலில் ஏற்படும் காயங்களில் வெற்றிலையை தடவினால், காயங்கள் விரைவில் காய்ந்துவிடும். இதனுடன் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ