நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை காலையில் சாப்பிடுங்க!

நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ், முட்டை, நட்ஸ் வகைகள் மற்றும் தயிர் போன்றவற்றை காலை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் அவர்களது ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Oct 13, 2022, 06:12 AM IST
  • சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த காலை உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம்
  • நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
  • நீரிழிவு நோயாளிகள் உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை காலையில் சாப்பிடுங்க!   title=

ஒரு நாளின் முழுமையான ஆற்றலுக்கு மூலதனமாக அமைவது காலை உணவு தான், 'காலையில் அரசனை போலவும், மதியம் வேலைக்காரனை போலவும், இரவில் பிச்சைக்காரனை போலவும் சாப்பிட வேண்டும்' என்கிற பழமொழி கூட உள்ளது.  காலையில் நாம் சாப்பிடும் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்க வேண்டும் அதுதான் அன்றைய நாளை உற்சாகமாக கொண்டு செல்ல வழிவகுக்கும்.  இரவில் நீண்ட உறக்கத்திற்கு பிறகு காலையில் சாப்பிடும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு நம்மை சுறுசுறுப்பாக்கும். அதனால் காலையில் சாப்பிடக்கூடிய உணவானது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் அதில் ஊட்டச்சத்து மிகுதியாக உள்ளதா என்பதை கவனித்து சாப்பிட வேண்டியது ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்.  

அதேசமயம் மற்ற நபர்களை போல நீரிழிவு நோயாளிகள் விருப்பப்பட்ட உணவையெல்லாம் அவ்வளவு சாதாரணமாக சாப்பிட்டுவிட முடியாது, உணவு விஷயத்தில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் மூன்று வேலையும் சாப்பிடக்கூடிய உணவுகள் அனைத்தும் அவர்களது ரத்த சர்க்கரையின் அளவை உயர்த்திடாத வண்ணம் இருக்க வேண்டும்.  அவர்கள் காலை உணவில் தானியங்கள், காய்கறிகள், புரதம் மற்றும் பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  இப்போது நீரிழிவு நோயாளிகள் காலை உணவாக எதையெல்லாம் உட்கொள்ளலாம் என்பதை பற்றி இங்கே காண்போம்.

மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா... உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ‘முக்கிய’ உணவுகள்! 

ஓட்ஸ் :

நார்சத்து நிறைந்த ஓட்ஸை காலை உணவாக எடுத்துக்கொள்வது நீரழிவு நோயாளிகளுக்கு நல்ல பலனை தரும்.  ஓட்ஸ் சாப்பிடுவதால் இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவது மெதுவாகவும் சீராகவும் இருப்பதாகவும், இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முட்டை :

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த காலை உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம், முட்டையில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது.  மேலும் இது சர்க்கரை அளவையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது.

பேசன் சில்லா :

சைவ உணவு மட்டுமே உண்பவர்கள் காலை உணவாக பேசன் சில்லா சாப்பிடலாம், இதில் நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது.

சியா விதைகள் :

சியா விதைகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, நீரிழிவு நோயாளிகள் இந்த விதைகளை தண்ணீரில் ஊறவைத்த பிறகு சாப்பிட வேண்டும், நார்ச்சத்து அதிகமுள்ள இந்த விதைகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

நட்ஸ் வகைகள் :

நட்ஸ் வகைகளை காலை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு அதிக ஆற்றல், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கிடைக்கிறது.

தயிர் :

தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் நொதித்தலின் போது லாக்டோஸ் சர்க்கரையை உருவாக்குகிறது, இது இயற்கையான சர்க்கரை என்பதால் உடலுக்கு எவ்வித ஆரோக்கிய சிக்கலையும் ஏற்படுத்தாது.  நீரிழிவு நோயாளிகள் உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News