Benefits of Lemon: எலுமிச்சை இவ்வளவு நன்மைகள் செய்யுமா

Benefits of Lemon: எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2021, 04:11 PM IST
Benefits of Lemon: எலுமிச்சை இவ்வளவு நன்மைகள் செய்யுமா title=

புதுடெல்லி: குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் என இரண்டிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் எலுமிச்சை. எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. பல பயன்களை அளிக்கும் எலுமிச்சையின் நன்மைகளை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

1- இதயத்திற்கு நன்மை பயக்கும்: எலுமிச்சம் (Lemon) பழம் சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட பெண்களுக்கு ஷெமிக் ஸ்ட்ரோக் எனப்படும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். எலுமிச்சையில் வைட்டமின் சி (Vitamins) சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் சி சத்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து, ஷெமிக் வாத நோய் ஏற்படாமல் இருக்கும். 

ALSO READ: Weight Loss: நெல்லிக்காயை இப்படி பயன்படுத்தினால் எடை குறையும்... 

2- எடையை பராமரிக்க உதவுகிறது: உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு ஒரு தினமும் காலையில் இளம் சூடான நீரில், சிறிது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை வெகு சீக்கிரமாக குறையும்.

3-சிறுநீரக கற்கள்: சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க நினைப்பவர்கள், ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் தினமும் எலுமிச்சம் பழ சாற்றை காலையில் அருந்தி வந்தால் வெகு விரைவில் அவர்கள் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைக்க உதவும்.

4- செரிமானத்தை மேம்படுத்துகிறது: எலுமிச்சையில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. உங்கள் செரிமானத்தை மேம்படுத்த விரும்பினால், நீங்கள் நிச்சயமாக எலுமிச்சை ஜூஸ் குடிப்பது நல்லது.

5-புற்றுநோய் ஆபத்து: எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது.

ALSO READ:Raisin Water: நீரில் ஊற வைத்த உலர் திராட்சையின் அற்புத நன்மைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News