இங்கிலாந்தின் குளுசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் ஹெய்டன் கிராஸ் என்பவர் பெண்ணாக இருந்த இவர் ஆணாக மாறுவதற்கு விரும்பி அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார்.
இதற்கான பிறப்புறுப்பு அறுவை சிகிச்சைக்கு அரசே நிதியுதவி செய்தது. சிகிச்சை முடிந்து, கடந்த 3 ஆண்டுகளாக ஹடென் சட்டப்படி ஆணாக வாழ்ந்து வருகிறார். ஆனால், தனது கருப்பையை மட்டும் அவர் அகற்றாமல் இருந்தார்,
இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி அறுவை சிகிச்சை மூலமாக இவர் அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தைக்கு ஒரு வயதான பிறகு மீண்டும் வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ள அவர், பிரசவம் முடிந்து விட்டதால் மீண்டும் முழு ஆணாக மாறுவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் குழந்தை பெற்ற முதல் ஆண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.