நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Honey and Diabetes:நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா? இதனால் உடல் நலனுக்கு பாதிப்பு வருமா?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 3, 2022, 07:05 PM IST
  • சர்க்கரையை விட தேன் உட்கொள்வது சிறந்தது.
  • நீரிழிவு நோயாளிகள் மீது தேனின் விளைவுகள்.
  • கிரானுலேட்டட் சர்க்கரையை விட தேன் இனிமையானது.
நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?  title=

நீரிழிவு என்பது ஒரு நோயாகும். இதில் உணவைக் கட்டுப்படுத்துவது மிக அவசியம். நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையிலான உணவுகளை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இனிப்புப் பொருட்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உணவில் இனிப்பு பொருட்களை உட்கொள்வதால் சர்க்கரை வேகமாக அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, உணவில் கார்போஹைட்ரேட், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் இனிப்புப் பொருட்களை உட்கொள்வதைக் குறைக்கவும்.

தேன் சுவையில் இனிமையாகவும், ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் விளங்கும் உணவு. இப்போது நீரிழிவு நோயாளிகள் இனிப்பு தேனை உட்கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக, நீரிழிவு உணவில் சர்க்கரை மற்றும் இனிப்புகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | Weight Control Tips: உடல் எடையை குறைக்க 5 நிமிட உடற்பயிற்சி 

தேன் மற்றும் சர்க்கரை இரண்டும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். வெள்ளை சர்க்கரை, கரும்பு சர்க்கரை அல்லது தூள் சர்க்கரை போன்ற சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக தேனை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை. சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா வேண்டாமா என்று தெரிந்து கொள்வோம்.

நீரிழிவு நோயாளிகள் மீது தேனின் விளைவுகள்

தேனில் சுக்ரோஸ், நீர் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. இதில் 80 சதவீதம் கார்போஹைட்ரேட் மற்றும் 20 சதவீதம் தண்ணீர் உள்ளது. இந்த இயற்கை இனிப்பானில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளன. இதில் இரும்புச்சத்து, வைட்டமின்-சி, ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் சிறந்த ஆதாரமான தேனை குறைந்த அளவில் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தத் தீங்கும் செய்யாது.

சர்க்கரையை விட தேன் நன்மை பயக்கும்:

கிரானுலேட்டட் சர்க்கரையை விட தேன் இனிமையானது. எனவே சில உணவுகளில் சர்க்கரைக்கு பதிலாக சிறிய அளவு தேனைப் பயன்படுத்தலாம். ஆனால் தேனில் உண்மையில் கிரானுலேட்டட் சர்க்கரையை விட சற்று அதிகமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக கலோரிகள் உள்ளன. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், சர்க்கரைக்குப் பதிலாக தேனை உட்கொள்ள விரும்பினால், அதை குறைந்த அளவிலேயே உட்கொள்ளுங்கள்.

சர்க்கரையை விட தேன் உட்கொள்வது சிறந்தது:

ஒரு ஆராய்ச்சியின் படி, தேன் உட்கொள்வதால், சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அரை மணி நேரத்திற்குப் பிறகு ஓரளவு அதிகரிக்கலாம். இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, இரத்த சர்க்கரை அளவு 2 மணி நேரத்திற்கு குறைகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிப்பதில் தேன் பயனுள்ளதாக இருக்கும். இதை குறைந்த அளவில் உட்கொள்வது சர்க்கரையை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 3 வீட்டு வைத்தியத்தால் உங்களின் வெள்ளை முடி கருப்பாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Trending News