காலையில் வெறும் வயிற்றில் காபி குடித்தால் இவ்வளவு ஆபத்தா?

பல உடற்பயிற்சி ஆர்வலர்களும் காலையில் எழுந்ததும் காபி எடுத்துக்கொள்கிறார்கள், ஏனெனில் அது அவர்களின் உடற்பயிற்சி செயல்திறனை அதிகரிக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Jan 20, 2023, 06:37 AM IST
  • பல உடற்பயிற்சி ஆர்வலர்களும் காலையில் எழுந்ததும் காபி எடுத்துக்கொள்கிறார்கள்.
  • காபி உடற்பயிற்சி செயல்திறனை அதிகரிக்கிறது.
  • காபி வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் காபி குடித்தால் இவ்வளவு ஆபத்தா?  title=

பொதுவாக மக்கள் பலரும் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக சூடாக ஒரு கப் காபி குடித்து தனது நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குகின்றனர்.  காலை வெறும் வயிற்றில் நாம் காபி குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது தானா? என்கிற கேள்வி பலருக்குள்ளும் இருந்து வருகின்றது.  காபியில் நிறைந்துள்ள காஃபின் என்கிற பொருள் ஒவ்வொரு நபரிடையேயும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  அதனால் தான் சிலருக்கு காலையில் வெறும் வயிற்றில் காபி குடித்ததும் புத்துணர்ச்சி கிடைப்பது போன்ற உணர்வு ஏற்படும் சிலருக்கு எவ்வித உணர்வும் இல்லாமல் போகும்.  தங்கள் மனநிலையை மேம்படுத்த மக்கள் பலரும் காலையில் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

பல உடற்பயிற்சி ஆர்வலர்களும் காலையில் எழுந்ததும் காபி எடுத்துக்கொள்கிறார்கள், ஏனெனில் அது அவர்களின் உடற்பயிற்சி செயல்திறனை அதிகரிக்கிறது.  காபி வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது, இதனை உடற்பயிற்சியாளர்கள் உட்கொண்டால் அவர்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.  இரைப்பைக் கோளாறுகள், வயிற்றுப் புண்கள் அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்கள் வெறும் வயிற்றில் காபியோ அல்லது அதிகப்படியான காஃபினையோ உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா... உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

நமது வயிற்றில் ஒரு சக்திவாய்ந்த அமிலம் உள்ளது, இது நமது வயிற்றின் புறணியைப் பாதுகாக்கிறது. நாம் சாப்பிடும் நச்சு பொருட்களினால் ஆபத்துகள் ஏற்படாதவாறு இவை நம்மை பாதுகாக்கிறது.  காஃபின் நிறைந்த பொருளை நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது இதில் சில பாதிப்புகள் ஏற்படுகிறது.  காபி சாப்பிடுவதற்கும், வயிறு அல்லது குடலில் புண் உருவாவதற்கும் இடையே எவ்வித தொடர்பும்  கண்டறியவில்லை என சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.  இருப்பினும் அதிகளவு காபி குடிப்பது குடலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  சிலருக்கு அதிகளவு காபி நெஞ்செரிச்சல் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் தூங்க செல்லும் நேரத்தில் குடித்தால் இது உங்களுக்கு தூக்கமின்மை பிரச்னையை ஏற்படுத்தும்.  யாருமே காலையில் முதலில் காபி குடிக்கக் கூடாது என்று கட்டளை கிடையாது, இது சிலருக்கு நல்ல விதமான பலன்களை கொடுக்கலாம்.  ஆனால் எதுவாக இருந்தாலும் அளவுடன் எடுத்துக்கொள்வது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

காபி வயிற்றில் அமில உற்பத்தியை ஏற்படுத்தும், இதனை நீர்த்துப்போகச் செய்ய நீங்கள் பாலுடன் சேர்த்த காபியை சாப்பிடுவது நல்லது மற்றும் உணவுடன் சேர்த்தும் நீங்கள் காபியை குடிக்கலாம்.  நீங்கள் காபி குடிப்பதற்கும், உணவு உண்பதற்கும் இடையே நீண்ட இடைவெளி எதுவும் இருக்கக்கூடாது, உணவுடன் சேர்த்தே காபி குடிப்பது நல்லது.  காபி மட்டும் சாப்பிட்டால் அதிலுள்ள காஃபின் நீண்ட நேரம் உங்கள் உடலில் தங்கி சில பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.  வெறும் வயிற்றில் காபி குடிப்பது அதிக தீங்கு விளைவிக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  உங்கள் உடலுக்கு ஏற்ற விகிதத்தில் நீங்கள் காபியை தேர்வு செய்யவேண்டியது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | 30 வயதை எட்டிவிட்டீர்களா? உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News